வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சேமியா பிரியாணி

Photo of Chicken vermicelli briyani by Meera Ansari at BetterButter
227
1
0.0(0)
0

சிக்கன் சேமியா பிரியாணி

Jun-14-2018
Meera Ansari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் சேமியா பிரியாணி செய்முறை பற்றி

சேமியா பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பல்லாரி 2
  2. தக்காளி-2
  3. பச்சை மிளகாய் 3
  4. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி
  7. தயிர் ஒரு மேசைக்கரண்டி
  8. உப்பு சிறிதளவு
  9. நெய் 2 மேசைக்கரண்டி
  10. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  11. மல்லி புதினா சிறிதளவு
  12. சேமியா 500 கிராம்
  13. சிக்கன் 200 கிராம் பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் எண்ணெய் இரண்டையும் ஊற்றவும்
  2. எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை நன்கு போட்டு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
  4. பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி சேர்த்து நன்கு கிளறி விடவும்
  6. பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  7. உப்பு சேர்க்கவும்
  8. நறுக்கி வைத்த சிக்கனை போடவும்
  9. தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்
  10. அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு சிக்கனை வேக வைக்கவும்
  11. இன்னொரு அடுப்பில் நன்கு கொதிக்கும் நீரில் சேமியாவை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்
  12. ஒரு நிமிடம் கழித்து உடனடியாக சேமியாவை வடிக்கவும்
  13. ஒரு நிமிடத்துக்கு மேலே சேமியாவை வேக வைக்க கூடாது உடனடியாக வடிக்க வேண்டும் இல்லையென்றால் குலைந்துவிடும்
  14. சேமியாவை வடித்தவுடன் குளிர்ந்த நீரில் சேமியாவை அலசவும்
  15. வடித்த சேமியாவை சிக்கன் கலவையில் சேர்க்கவும்
  16. அடுப்பை அனைத்து விட்டு போர்க் கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்
  17. மல்லி இலை புதினா இலை சேர்த்து சுடச்சுட பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்