வீடு / சமையல் குறிப்பு / மிளகு கறிவேப்பிலை குழம்பு

Photo of Pepper Curryleaves Kuzhambu by Sowmya Sundar at BetterButter
271
1
0.0(0)
0

மிளகு கறிவேப்பிலை குழம்பு

Jun-21-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு கறிவேப்பிலை குழம்பு செய்முறை பற்றி

மிளகு கறிவேப்பிலை சேர்த்து புதிதாக வறுத்து அரைத்து செய்த ஆரோக்கியமான குழம்பு. ஜீரண சக்திக்கு நல்லது .வாரம் ஒருமுறை செய்து கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி - எலுமிச்சை அளவு
  2. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  3. உப்பு- தேவையான அளவு
  4. நல்லெண்ணெய்-1 குழிக்கரண்டி + 1 டீஸ்பூன்
  5. கடுகு -1 டீஸ்பூன்
  6. சீரகம்-1/2 டீஸ்பூன்
  7. வெந்தயம்-1/4 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை-சிறிது
  9. வறுத்து அரைக்க :
  10. கடலை பருப்பு-1 டீஸ்பூன்
  11. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  12. துவரம் பருப்பு-2 டீஸ்பூன்
  13. மல்லி விதை -2 டீஸ்பூன்
  14. மிளகு- 1 1/2 டீஸ்பூன்
  15. மிளகாய் வற்றல்-4
  16. வெந்தயம்-1/2 டீ னஸ்பூன்
  17. சீரகம்-1 டீஸ்பூன்
  18. கறிவேப்பிலை-1 கைப்பிடி
  19. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  2. பின் அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. புளியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
  4. கடாயில் மீதி நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் ,சிறிது கறிவேப்பிலை தாளித்து புளிகரைசலை விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  5. புளி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதித்து கெட்டியாக ஆனதும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்