வீடு / சமையல் குறிப்பு / பாண்டிச்சேரி சாம்பார் - புதுச்சேரி சாம்பார்

Photo of Pondicherry Sambhar - Puducherry Sambhar by Sandhya Ramakrishnan at BetterButter
4031
17
0.0(1)
0

பாண்டிச்சேரி சாம்பார் - புதுச்சேரி சாம்பார்

May-20-2016
Sandhya Ramakrishnan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு - 3/4 கப்
  2. மஞ்சள் பூசணி (அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு காய்கறிகள் ஏதாவது), 2 கப் (பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்டது)
  3. வெங்காயம் - 1 பெரியது ( மெலிதாக நறுக்கப்பட்டது)
  4. தக்காளி - 2 (நறுக்கப்பட்டது)
  5. பூண்டு பற்கள் - 3 (நசுக்கப்பட்டது)
  6. புளி - 1/2 தேக்கரண்டி
  7. வெல்லம் - 1 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை - கொஞ்சம்
  9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  10. மிளகு - 1/2 தேக்கரண்டி
  11. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  12. கடுகு - 1 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  14. சிவப்பு மிளகாய் - 4/5
  15. கொத்தமல்லி - கொஞ்சம்
  16. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு பிரஷர் குக்கரில் துவரம் பருப்பை கிட்டத்தட்ட 2 கப் தண்ணீர் விட்டு மிருதுவாகி மசியும் வரை வேகவைக்கவும். ஆறட்டும். அதன்பிறகு வேகவைத்த பருப்புத் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி, எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில், எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.
  3. இப்போது சிவப்பு பூசணிக்காய் அல்லது உங்களுக்குப் பிடித்தக் காய்கறி, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடங்கள் é வதக்கவும். அதன் பிறகு வேகவைத்த பருப்புத்தண்ணீர், வெல்லம், உப்பு சேர்க்கவும். கடாயை மூடி காய்கறியை வேகவைக்கவும்.
  4. இதற்கிடையில், பூண்டை நசுக்கிக்கொள்ளவும், சீரகம், மிளகளை குழவியில் ஒன்றும்பாதியுமாக இடித்துக்கொள்ளவும்.
  5. காய்கறிகள் வெந்ததும். புளி விழுது, வேகவைத்த பருப்பு, நசுக்கப்பட்ட பூண்டு பற்கள், நசுக்கப்பட்ட சீரகம், மிளகுடன் கொத்துமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
  6. கடாயை மூடி மேலும் 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  7. சாதம், நெய்யுடன் காய்கறி ஒரு பக்கத்தில் வைத்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Manjula Jadhav
Aug-10-2018
Manjula Jadhav   Aug-10-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்