வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை லட்டு

Photo of Paan ladoo by Nancy Samson at BetterButter
276
6
0.0(0)
0

வெற்றிலை லட்டு

Jun-23-2018
Nancy Samson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை லட்டு செய்முறை பற்றி

இது வெற்றிலை கலவையில் குல்கந்து வைத்து செய்யும் ஒரு வடநாட்டு லட்டு வகை. மிகவும் சுலபமாக செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • ஈஸி
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெற்றிலை -10 இலைகள்
  2. குல்கந்து - 1/4 கப்
  3. உலர் பழங்களின் கலவை 5 மேசைக்கரண்டி
  4. நட்ஸ் - 5 மேசைக்கரண்டி
  5. கண்டன்ஸ்ட் மில்க் - 600கிராம்
  6. பதப்படுத்தப்பட்ட தேங்காய் தூள் - 1 கப்
  7. நெய்- சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெற்றிலையை கழுவி காம்பு நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. உலர்ப்பழம் மற்றும் நட்ஸ் இரண்டையும் பொடி செய்து குல்கந்துடன் கலந்து தனியே வைக்கவும்.
  3. ஒரு நான்ஸ்டிக் கடாயில், வெற்றிலையை போட்டு வதக்கவும்
  4. இத்துடன் கண்டன்ஸ்ட் மில்க், சிறிது பச்சை நிறமி சேர்த்து 10நிமிடம் கிளறவும்.
  5. பின்னர் தேங்காய் தூள் சேர்த்து சுருள சுருள கிளறி இறக்கவும்.
  6. இந்த கலவையை 15நிமிடம் ஆரவைக்கவும்.
  7. கையில் நெய் தடவி, வெற்றிலை கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  8. உருட்டிய உருண்டையை பை போல செய்து, உள்ளே குல்கந்து பூரனம் வைத்து மூடவும்.
  9. இதனை தேங்காய் தூளுள் புரட்டி எடுத்து வைக்கவும்.
  10. பூரண கொழுக்கட்டை போல செய்ய வேண்டும்.
  11. வெற்றிலை லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்