வீடு / சமையல் குறிப்பு / ராகி நாட்சோஸ் வித் சிவப்பு குடமிளகாய் வால்ட் டிப்

Photo of Ragi Nachos with Red Capsicum walnut dip by saranya sathish at BetterButter
1158
2
0.0(0)
0

ராகி நாட்சோஸ் வித் சிவப்பு குடமிளகாய் வால்ட் டிப்

Jun-25-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி நாட்சோஸ் வித் சிவப்பு குடமிளகாய் வால்ட் டிப் செய்முறை பற்றி

ராகி நாட்சோஸ் வித் சிவப்பு குடமிளகாய் வால்ட் டிப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு - 1/2 கப்
  2. அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  3. கோதுமை மாவு - 1/4 கப்
  4. உப்பு - 1/2 டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  6. சிவப்பு குடமிளகாய் - 1/2
  7. வெங்காயம் - 1
  8. பூண்டு - 2 பல்
  9. சிவப்பு மிளகாய் - 1/2
  10. வெண்ணெய் - 1 ஸ்பூன்
  11. வால்நட் - 6

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு அரிசி மாவு உப்பு மிளகாய் தூள் கோதுமை மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  2. பின்னர் அந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து ஓட்டை போட்டு கொள்ளவும்.
  3. செய்த சப்பாத்திகளை பீட்சா கட்டர் கொண்டு முக்கோண வடிவில் கட் செய்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யவும் நன்றாக சூடானதும் முக்கோண வடிவில் கட் செய்து வைத்த நாட்சோஸ்ஸை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. குடைமிளகாயில் எண்ணெய் தடவி அடுப்பில் காட்டி நன்றாக சுட்டு கொள்ளவும்.
  6. பின்னர் அதன் தோலை நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்யவும்.
  7. ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து பின் வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. பின்னர் உப்பு குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  9. கடைசியில் வால்நட் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்