வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அவல் புட்டு

Photo of Red Aval Puttu by Sowmya Sundar at BetterButter
763
2
0.0(0)
0

சிவப்பு அவல் புட்டு

Jun-25-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அவல் புட்டு செய்முறை பற்றி

சிவப்பு அவலில் வெல்லம் சேர்த்து செய்த புட்டு. எல்லோருக்கும் பிடித்த ஆரோக்கியமான புட்டு இது.சுலபமாக செய்து தரலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிவப்பு கெட்டி அவல் - 1 கப்
  2. வெல்லம் -3/4 கப்
  3. தேங்காய் துருவல்-1/4 கப்
  4. நெய்- 2 டேபிள் ஸ்பூன்
  5. முந்திரி பருப்பு-6
  6. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் அவலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.பின் அதை மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளவும்
  2. பொடித்த அவலை சிறிது தண்ணீர் விட்டு களைந்து நன்றாக வடிகட்டி வைத்து கொள்ளவும்.
  3. அதே கடாயில் வெல்லம் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து லேசாக கொதித்ததும் தூசி வடிகட்டி கொள்ளவும்.
  4. வடிகட்டிய வெல்லநீரை மறுபடியும் கடாயில் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
  5. உருண்டை பாகு வந்ததும் வடிகட்டிய அவல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும். ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
  6. நன்றாக உதிர்ந்ததும் அடுப்பை அணைத்து நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்