வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் ரசமலாய்

Photo of Bread rasamalai by Meera Ansari at BetterButter
352
1
0.0(0)
0

ப்ரெட் ரசமலாய்

Jun-25-2018
Meera Ansari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் ரசமலாய் செய்முறை பற்றி

சிம்பிளாக பிரட்டை வைத்து செய்யப்படும் ரசமலாய்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் 500 மில்லி
  2. சர்க்கரை ஒரு கப்
  3. பிரெட் துண்டுகள் 8
  4. முந்திரி பாதாம் பிஸ்தா சிறிதளவு,

வழிமுறைகள்

  1. முதலில் 500 மில்லி பாலை கனமான பாத்திரத்தில் காய்ச்ச வேண்டும்
  2. பால் கொதிக்கும் நிலை வரும் முன்னே சர்க்கரை ஒரு கப்பை சேர்க்க வேண்டும்
  3. பாலை நன்றாக வற்ற விடவும்
  4. பால் கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்
  5. பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்த பாதாம் பிஸ்தா முந்திரி பாலில் போடவும்
  6. பாலை நன்றாக ஆறவிடவும்
  7. பிறகு வட்டமான சிறிய மூடியை எடுத்து கொள்ளவும்
  8. பிரெட்டின் நடுப்பகுதியில் வட்டமான மூடியை வைத்து அழுத்த வேண்டும்
  9. ஒவ்வொரு பிரட்டுக்கும் இதே முறையை பின்பற்றவும்
  10. வட்டமான பிரெட் துண்டுகளை ஒரு பவுலில் போடவும்
  11. பிறகு தயார் செய்து வைத்துள்ள பாலை (ரசமலாய்) பிரட்டின் மேலே ஊற்றவும்
  12. மீதமுள்ள டிரைஃப்ரூட்ஸை மேலே தூவி அலங்கரிக்கவும்
  13. இப்பொழுது சுவையான ப்ரெட் ரசமலாய் ரெடி
  14. இதனை குளிர்சாதன பெட்டியில் அரை மணி நேரம் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்