வீடு / சமையல் குறிப்பு / எங்க வீட்டு ஸ்பெஷல் தக்காளி சட்டினி

Photo of tomato Chutney by hajirasheed haroon at BetterButter
104
4
0.0(0)
0

எங்க வீட்டு ஸ்பெஷல் தக்காளி சட்டினி

Jun-26-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எங்க வீட்டு ஸ்பெஷல் தக்காளி சட்டினி செய்முறை பற்றி

வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாயை சேர்த்து செய்த சுவையான சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 3
  2. தக்காளி ஐந்து
  3. காய்ந்த மிளகாய் 4
  4. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு சிறு துண்டுகள்
  7. தேவையான அளவு உப்பு
  8. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கருவேப்பிலை
  9. எண்ணெய் நான்கு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் வெங்காயம் முக்கால் பாகம் வெந்தவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்
  3. மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும்
  5. இந்தச் சட்னியை இட்லி தோசை பணியாரம் ஆகியவற்றுக்கு சைட் டிஷ் ஆக தொட்டு சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்