வீடு / சமையல் குறிப்பு / க்ரீன் ரயீஸ் இன் த பெட் ஆஃப் வெஜ் குருமா

Photo of Green rice in the bed of veg kurma by Shobana Rajesh at BetterButter
444
2
0.0(0)
0

க்ரீன் ரயீஸ் இன் த பெட் ஆஃப் வெஜ் குருமா

Jun-27-2018
Shobana Rajesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

க்ரீன் ரயீஸ் இன் த பெட் ஆஃப் வெஜ் குருமா செய்முறை பற்றி

இந்த ரெசிபியில் க்ரீன் மசாலா யூஸ் பண்ணி(புதினா ,கொத்தமல்லி ) ரைஸ் செய்துஉள்ளோம், இதனுடன் காலிஃளார்ர், காரட், பட்டாணி,உருளை சேர்த்து கிரீம் சேர்த்து குருமா செய்துஉள்ளோம். இதனை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதத்திற்கு
  2. பாசுமதி அருசி 1 கப்
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  4. வெங்காயம் பெரியது நீளவாக்கில் நறுக்கியது 1
  5. பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தலா 2
  6. புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் 2 இஞ்சி சிறிய துண்டு சின்ன வெங்காயம் 2 சிறிய எலுமிச்சை சாறு உப்பு அனைத்தையும் வேறு அரைத்த விழுது இரண்டு மேசைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் மற்றும் நெய் தலா 2 மேசைக்கரண்டி
  9. தண்ணீர் ஒரு கப்பிற்கு ஒன்றரை கப்
  10. இது குரு மாவிற்கு
  11. வெங்காயம் பெரியது ஒன்று
  12. தக்காளி சுமாரான அளவு 1
  13. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  14. புதினா மற்றும் கொத்தமல்லி இலை இரண்டும் சேர்ந்து ஒரு கைப்பிடி அளவு
  15. மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் தலா ஒரு தேக்கரண்டி
  16. பச்சைமிளகாய் 2
  17. பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தலா 2
  18. கிரீன் ஒரு மேசைக்கரண்டி
  19. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  20. காலிஃப்ளவர் கேரட் உருளை பட்டாணி தலா சிறிய கப் ஓன்று

வழிமுறைகள்

  1. இது சாதத்திற்கு: முதலில் அரிசியை தண்ணீரில் ஊரவைக்கவேண்டும் அரை மணி நேரம் பின்பு வெங்காயத்தை அரிந்து கொண்டு தக்காளியை அரிந்து கொண்டு குக்கரை அடுப்பில் வைத்து பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தலா 2 எண்ணெய் கலந்த கலவையில் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  2. இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனால் சேர்த்து நன்றாக வதக்கி பின்பு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து க்ரீன் மசாலா ரைஸ் ரெடி
  3. இது குருவிற்கு : முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு வதக்கி பச்சை மிளகா கிள்ளி போட்டு பின்பு அறிந்து வைத்துள்ள காய்கறிகளை அதனால் சேர்த்து நன்றாக வதக்கி மஞ்சள் பொடி மிளகாய் பொடி உப்பு மல்லித் தூள் கரம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  4. இப்பொழுது தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிட்டு பின்பு இறக்கியவுடன் காய்களை சேர்த்து நன்றாக மசித்து பின்பு க்ரீமை அதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் குருமா பதம் வந்ததும் ரொம்பவும் தண்ணியா இருக்கக்கூடாது ரொம்பவும் திக்காக இருக்க கூடாது.குருமா பதம் வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்