வீடு / சமையல் குறிப்பு / மூன்று வண்ண பால் புட்டிங்

Photo of 3 colours milk pudding by hajirasheed haroon at BetterButter
396
5
0.0(0)
0

மூன்று வண்ண பால் புட்டிங்

Jun-27-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூன்று வண்ண பால் புட்டிங் செய்முறை பற்றி

காபி பவுடர் பிஸ்தா essence செர்ரி பழம் வைத்து செய்துள்ளது இதை ஜில்லுனு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 3 டம்ளர்
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. கடல்பாசி
  4. தண்ணி தேவையான அளவு
  5. மில்க் மெய்ட் தேவையான அளவு
  6. பிஸ்தா எஸன்ஸ் சில துளிகள்
  7. செர்ரி பழம் ஒரு கப்
  8. காபி பவுடர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் பாலை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்
  2. கடல் பாசியை மிக்ஸியில் பொடிசாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கடல் பாசியை போட்டு கொதிக்கவிடவும் கடல் பாசி கலந்த தண்ணீர் கொதித்தவுடன் அதில் சர்க்கரை பால் மில்க்மெய்டு ஊற்றி நன்கு கலக்கவும் அதில் காபி பவுடர் சேர்த்து கலக்கவும்
  4. கலக்கிய காபி பவுடர் ஒரு கண்ணாடி பவுலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடம் வைக்கவும்
  5. க்ரீன் கலர் புட்டிங் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கடல்பாசி சேர்த்து கொதிக்க விடவும் கொதித்தவுடன் அதில் பால் சர்க்கரை மில்க்மெய்டு பிஸ்தா எசன்ஸ் சில துளிகள் சேர்த்து நன்கு கலந்து ஏற்கனவே காஃபி புட்டிங் ஊத்தி வைத்துள்ளபவுலின் இந்த பிஸ்தா கலவையை ஊற்றவும்
  6. இதையும் பத்து நிமிஷம் செட் செய்யவும்
  7. சிவப்பு நிற புட்டிங் செய்வதற்கு செர்ரி பழத்தை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  8. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கடல்பாசி சேர்த்து கொதிக்கவிடவும் கொதித்ததும் பால் சர்க்கரை milkmaid சேர்த்து நன்கு கலந்து விடவும் பால் கொஞ்சம் ஆறியவுடன் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து கலந்து ஏற்கனவே ஊற்றி வைத்துள்ள காஃபி பிஸ்தா புட்டிங் மேல் இந்த கலவையை ஊற்றி ஃபிரிட்ஜில் செட் செய்யவும்
  9. ஒரு 40 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென சாப்பிட சுவையாக இருக்கும்
  10. குழந்தைகள் ரொம்பவே விரும்பி மில்க் மெய்ட் சேர்த்து இருப்பதால் டேஸ்ட் சுவையாக இருந்தது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்