வீடு / சமையல் குறிப்பு / ராகி இனிப்பு அடை

Photo of ragi sweet adai by Subhis Kitchen at BetterButter
484
1
0.0(0)
0

ராகி இனிப்பு அடை

Jun-28-2018
Subhis Kitchen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி இனிப்பு அடை செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய ஒரு சத்தான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு அரை கப்
  2. தேங்காய் 2 மேசைக்கரண்டி
  3. வெல்லம் 2 மேசைக்கரண்டி
  4. உப்பு ஒரு துளி
  5. ஏலக்காய் பொடி அரை ஸ்பூன்
  6. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் உப்பு ஏலக்காய்த்தூள் தேங்காய் இவற்றை சேர்க்கவும்
  2. அதனுடன் ராகி மாவு சேர்க்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி கொதிக்க விடவும்
  4. அந்தத் தண்ணீரை வடிகட்டி அதனுடன் இந்த மாவு கலவையை சேர்க்கவும்
  5. இந்த கலவையை இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
  6. ஒரு தவாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்ப்பது போல் வார்த்து எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும் சுவையான ராகி அடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்