Photo of Brownie by Kathija Lathif at BetterButter
347
2
0.0(0)
0

பிரவுணி

Jun-29-2018
Kathija Lathif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பிரவுணி செய்முறை பற்றி

A tasty quick brownie

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. செமி ஸ்வீட் சாக்லெட் சிப் 150 கிராம்
  2. வெண்ணெய் (உப்பில்லாதது)113 கிராம்
  3. முட்டை 3
  4. வெண்ணிலா எசன்ஸ் 2 டீஸ்பூன்
  5. சர்க்கரை 200 கிராம்
  6. மைதா 95 கிராம்
  7. கொக்கோ பவுடர் ஒரு குழிக்கரண்டி
  8. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை முதலில் கொதிக்க வைக்கவும்
  2. பின்னர் ஒரு மிக்ஸிங் பவுலில் வெண்ணையும் சாக்லேட்டும் சேர்த்து வைக்கவும்
  3. சுடுநீர் பாத்திரத்தின் மீது இந்த பாத்திரத்தையும் வைத்து வெண்ணையும் சாக்லெட்டும் சேர்த்து உருக்கவும்
  4. வெண்ணையும் சாக்லேட்டும் நன்றாக உருகியதும் அதை தனியே எடுத்து வைத்து அதில் சர்க்கரையும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்
  5. பின்னர் ஒவ்வொரு முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்
  6. பின்னர் கோகோ பவுடர் மைதா மாவையும் சேர்த்து நன்றாக ஒன்றாகும்படி கலக்கவும்
  7. ஒரு எட்டு அங்குல ஸ்கொயர் பானை எடுத்து அதில் நன்றாக வெண்ணெய் தேய்த்து வைக்கவும் அல்லது பட்டர் பேப்பர் போட்டு வைக்கவும்
  8. அதில் பிரொணி கலவையை ஊற்றி சமன்படுத்தவும்
  9. அவனை 180 டிகிரி சென்டிகிரேடுக்கு ப்ரீஹீட் செய்யவும்
  10. பிறகு பிரவுனி கலவையை உள்ளே வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்
  11. பிறகு அதனை வெளியே எடுத்து அதனை ஆற விட்டு சதுரங்களாக வெட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்