வீடு / சமையல் குறிப்பு / ரசமலாய்

Photo of Rasamalai by Meera Ansari at BetterButter
0
1
0(0)
0

ரசமலாய்

Jun-30-2018
Meera Ansari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரசமலாய் செய்முறை பற்றி

பன்னீரில் செய்யப்படும் ரசமலாய்

செய்முறை டாக்ஸ்

 • మీడియం/మధ్యస్థ
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பால் ஒரு லிட்டர்
 2. சர்க்கரை 2 கப்
 3. எலுமிச்சை பழம் ஒன்று
 4. ஏலக்காய்த் தூள் அரை மேசைக்கரண்டி
 5. கான்பிளவர் மாவு அரை மேசைக்கரண்டி
 6. பாதாம் பிஸ்தா சிறிதளவு

வழிமுறைகள்

 1. முதலில் 500 மில்லி பாலை தனியாக காய்ச்சவும்
 2. பால் கொதித்த உடன் எலுமிச்சம்பழத்தை கொட்டை இல்லாமல் பிழியவும்
 3. கிளறி விட்டு ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
 4. திரியாக வந்த பாலை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டவும்
 5. குழாய் தண்ணீரில் கழுவ வேண்டும்
 6. வெள்ளைத் துணியை கயிறால் கட்டி 30 நிமிடங்களுக்கு வடியவிட வேண்டும்
 7. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையை மட்டும் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்ய வேண்டும்
 8. அடி கனமான பாத்திரத்தில் மீது 500 மில்லி பாலை ஒரு கப் சர்க்கரை சேர்த்து காய்ச்ச வேண்டும்
 9. பால் நன்கு கட்டி பதத்திற்கு வர வேண்டும்
 10. அதனால் பாலை நன்றாக கிளறி விட்டு வற்ற வைக்க வேண்டும்
 11. பாத்திர ஓரத்தில் ஒட்டி இருக்கும் பால் ஆடைகளை கரண்டியால் சுரண்டி விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்
 12. பால் நன்கு கெட்டியானவுடன் கால் பங்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
 13. இப்பொழுது ரசமலாய் தயாராகிவிட்டது
 14. ரசமலாய் நன்கு ஆற விடவும்
 15. வெள்ளைத் துணியில் கட்டி இருக்கும் திரியை 30 நிமிடங்களுக்கு பிறகு கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து நன்கு பிசையவும்
 16. அகலமான தட்டில் போட்டு பிசைந்தால் வசதியாக இருக்கும்
 17. 10 முதல் 15 நிமிடங்களுக்கு இடைவிடாது சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து விடவும்
 18. பிறகு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்
 19. 12 முதல் 15 உருண்டைகள் வரலாம்
 20. ஒவ்வொரு உருண்டையையும் உள்ளங்கையில் வைத்து வட்டமான வடிவில் அழுத்தி எடுக்கவும்
 21. உள்ளங்கையில் வைத்து அழுத்தி எடுக்கும் பொழுது பொறுமை அவசியம்
 22. பிறகு வட்ட வடிவிலான ஒவ்வொரு திரியை அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சீனிப்பாகில் ஒவ்வொன்றாக பொறுமையாக போடவும்
 23. ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்
 24. திரிகள் உப்பி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
 25. நன்கு ஆற விடவும்
 26. 15 நிமிடங்களுக்கு பிறகு சர்க்கரைப் பாகிலிருந்து ஒவ்வொரு திரியாக எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்
 27. ஒவ்வொரு திரியில் இருந்து சக்கர பாகை மெல்லிதாக கையில் வைத்து பிழிந்து ரசமலாய் பாலில் சேர்க்கவும்
 28. மேலும் நறுக்கி வைத்துள்ள பாதாம் தூவி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்
 29. இப்பொழுது ரசமலாய் ரெடியா ஆகிவிட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்