பெங்காலி கோஜா | Bengali goja in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  1st Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Bengali goja by hajirasheed haroon at BetterButter
பெங்காலி கோஜாhajirasheed haroon
  • ஆயத்த நேரம்

    60

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

1

0

பெங்காலி கோஜா recipe

பெங்காலி கோஜா தேவையான பொருட்கள் ( Ingredients to make Bengali goja in Tamil )

  • மைதா மாவு ஒரு கப்
  • சர்க்கரை ஒரு கப்
  • வெண்ணெய் உருக்கியது ரெண்டு கரண்டி
  • தேவையான அளவு உப்பு
  • தண்ணீர் தேவையான அளவு

பெங்காலி கோஜா செய்வது எப்படி | How to make Bengali goja in Tamil

  1. மைதா மாவில் உப்பு வெண்ணெய் தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
  2. இந்த மாவை ஒரு 50 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கெட்டியான கம்பி பதம் வரும் வரை காய்ச்சி கொள்ளவும்
  4. பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வட்டமாக தேய்த்து பாதியாக நறுக்கி அதன் மேலே மேலே மடக்கி மடக்கி தேய்க்கவும் தேய்த்த மாவை கட்டம் கட்டமாக வெட்டிக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. பொரித்து எடுத்த கோஜாவை சர்க்கரை பாகில் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து எடுத்து பரிமாறலாம்
  7. சுவையான இனிப்பான கோஜா தயார்

Reviews for Bengali goja in tamil (0)