வீடு / சமையல் குறிப்பு / திருவையாறு அசோகா அல்வா

Photo of Thiruvaiyaru asoka halwa by Nancy Samson at BetterButter
560
1
0.0(0)
0

திருவையாறு அசோகா அல்வா

Jul-02-2018
Nancy Samson
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

திருவையாறு அசோகா அல்வா செய்முறை பற்றி

தஞ்சையில் உள்ள திருவையாறு என்னும் இடத்தில் இந்த அல்வா மிகவும் பிரபலம். தஞ்சாவூர் திருமணங்களில் இனபிஹா அல்வா பரிமாறப்படும். நல்ல சுவை மற்றுமசுலபமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தோல் நீக்கி உடைத்த பயத்தம் பருப்பு- 1கப்
  2. சர்க்கரை - 2கப்
  3. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
  4. நெய் -1கப்
  5. உப்பு - 2 சிட்டிகை
  6. முந்திரி - 10
  7. சிவப்பு நிறமி - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 3மணிநேரம் ஊறவைத்த பயத்தம்பருப்பை, நீர் வடித்து, குக்கரில் 2கப் நீர் சேர்த்து 3விசில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
  2. வேகவைத்த பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும்.
  3. ஒரு நான் ஸ்டிக் கடாயில், 4மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அதே நெய்யில் மசித்த பயத்தம்பருப்பை சேர்த்து , அதோடு 2கப் சர்க்கரை சேர்த்து, நன்றாக கிளறவும்.
  5. அதோடு ஏலக்காய் தூள், 2சிட்டிகை உப்பு மற்றும் முந்திரி சேர்த்து , கிளறவும்.
  6. இந்த கலவையில் , சிறுது சிறிதாக நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  7. சிவப்பு நிரமியை சேர்த்து , நெய் பிரியும் வரை கிளறி இறக்கவும்.
  8. நெய் பிரிந்து , பளபளப்பாக அல்வா கடாயில் ஒட்டாமல் வரும். விரல்களில் நீர் தொட்டு, அல்வாவை தொட்டால் கையில் ஒட்டாமல் இருக்கவேண்டும். இதுவே சரியான பதம்.
  9. திருவையாறு அசோகா அல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்