வீடு / சமையல் குறிப்பு / கீழாநெல்லி ஹெல்த்தி பஞ்ச்

Photo of Phyllanthus niruri healthy punch by Adaikkammai Annamalai at BetterButter
670
2
0.0(0)
0

கீழாநெல்லி ஹெல்த்தி பஞ்ச்

Jul-02-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீழாநெல்லி ஹெல்த்தி பஞ்ச் செய்முறை பற்றி

கீழாநெல்லி ஒரு மருத்துவ குணமுடைய செடி. இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையது,தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.அதனால் இதை அப்படியே உட்கொள்வதை விட இதை ஒரு சூப்பாக வைத்து சாப்பிடலாம் எலும்பு சூப்புக்கு நிகராக இருக்கும்,, மேலும் மிக மிக ஆரோக்கியமானது ஈரல் பகுதிக்கு,, என்வேய் கட்டாயம் பயன்படுத்தி தினமும் செய்து இயற்கை யோடு ஒத்து வாழுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 2 tsp
  2. கீழாநெல்லி கீரை - 1 கை அளவு
  3. சீரகம் - 1 tsp
  4. மிளகு - 2 tsp
  5. மல்லி - 1 tsp
  6. இஞ்சி - சிறு துண்டுகள்
  7. பூண்டு - 4
  8. வேகவைத்த பருப்பு - 1 /2 கப்
  9. பருப்பு தண்ணி தனியாக பிரித்து 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் பருப்புடன் பூண்டு போட்டு வேக வைத்து எடுத்து தண்ணியை தனியாக பிரித்து கெட்டியான பரூப்பை தனியாக எடுத்து கொள்ளவும்,
  2. பின் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  3. இது தான் கீழாநெல்லி கீரை , இது புளிய இலை போல் இருக்கும் ஆனால் ஓவொரு இளைக்கும் ஒரு மூட்டு இருக்கும் இது போல்
  4. கீரையை காம்பு நீக்கி இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக இரண்டு மூன்று முறை அலசவும்
  5. குக்கரில் வைத்தால் 10 நிம்டங்களிள் வேலை முடியும் எனசி குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் ,மிளகு, மல்லி, இஞ்சி நான்கையும் போட்டு பொரிய விடவும்
  6. பொரிந்த பின் அலசிய கீரையை சேர்த்து வதக்கவும்
  7. பின் கெட்டியான பருப்பை சேர்த்து உப்பு போட்டு கொதிக்கவிட்டு பருப்பு தண்ணியும் சேர்த்து குக்கர் மூடி வைக்கவும்
  8. பின் 1 சவுண்ட் 5 நிமிடத்தில் ஆப் செய்து சூடாக இந்த ஹெல்த்தி பஞ்ச்சை பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்