வீடு / சமையல் குறிப்பு / இரண்டு வகை வண்ண சட்னியுடன் கம்பு தோசை

Photo of Two colours chutny &millet dosai by hajirasheed haroon at BetterButter
304
4
0.0(0)
0

இரண்டு வகை வண்ண சட்னியுடன் கம்பு தோசை

Jul-03-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இரண்டு வகை வண்ண சட்னியுடன் கம்பு தோசை செய்முறை பற்றி

காலை நேரத்தில் டிபனாக சாப்பிடலாம் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி அரிசி ஒரு கப்
  2. உளுத்தம் பருப்பு கால் கப்
  3. கம்பு 5 டேபிள்ஸ்பூன்
  4. தக்காளி சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  5. தக்காளி-2
  6. வெங்காயம் 2
  7. காய்ந்த மிளகாய்-2
  8. பூண்டு 2பல்
  9. உப்பு தேவையான அளவு
  10. உளுத்தம் பருப்பு
  11. பச்சை நிற சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  12. புதினா ஒரு கப்
  13. கொத்தமல்லி இலை அரை கப்
  14. தேங்காய் துருவல் 1/4கப்
  15. புளி சிறிதளவு
  16. பச்சைமிளகாய் 2
  17. உளுத்தம் பருப்பு 1ஸ்பூன்
  18. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தோசை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் கம்பு அரிசி உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்து அதை அரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  2. சிவப்பு சட்னி செய்வதற்கு வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரியவிடவும் அதில் காய்ந்த மிளகாய் நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் தக்காளி உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்
  4. ஆறிய கலவையை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  5. பச்சை நிற சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு புதினா மல்லி இலை தேங்காய் துருவல் புளி உப்பு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் ஆறவைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிய விட்டு பச்சை நிற சட்னியிலும் சிவப்பு நிற சட்னியிலு சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும்
  7. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் புளித்த மாவை தோசையாக ஊற்றி பரிமாறலாம்
  8. ஊற வைத்த நேரத்தையும் மாவு புளித்த நேரத்தையும் நான் இதில் சேர்க்கவில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்