வீடு / சமையல் குறிப்பு / மண்பாண்டம் மட்டன் பிரியாணி

Photo of mud pot மட்டன் பிரியாணி by senthil vanan at BetterButter
504
1
5.0(0)
0

மண்பாண்டம் மட்டன் பிரியாணி

Jul-03-2018
senthil vanan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மண்பாண்டம் மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

பாரம்பரிய ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் 300 கிராம்
  2. சீரக சம்பா அரிசி 200 கிராம்
  3. அரைக்க
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. பூண்டு 10 பல்
  6. பட்டை ஒரு துண்டு
  7. கிராம்பு நான்கு
  8. சோம்பு ஒரு டீஸ்பூன்
  9. தாளிக்க
  10. பிரியாணி இலை இரண்டு
  11. மராட்டி மொக்கு ஒன்று
  12. அன்னாசி பூ 1
  13. பட்டை ஒரு துண்டு
  14. கிராம்பு-2
  15. சோம்பு ஒரு டீஸ்பூன்
  16. ஏலக்காய்-2
  17. கருவேப்பிலை சிறிது
  18. புதினா சிறிது
  19. பெரிய வெங்காயம் ஒன்று
  20. தக்காளி ஒன்று
  21. பச்சை மிளகாய் 4
  22. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  23. மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
  24. எலுமிச்சை பழம் பாதி
  25. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மண்சட்டியை எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்
  2. பின்பு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்
  3. வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்
  4. பின்பு அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  5. இப்பொழுது தக்காளி சேர்த்து கிளற வேண்டும்
  6. பின்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
  7. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்
  8. பின்பு மட்டனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  9. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்
  10. தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
  11. மட்டன் 90% வெந்து தண்ணீர் வற்றியதும், 1 க்கு 2 தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  12. இப்பொழுது எலுமிச்சம்பழம் பிழிந்து விடவும்
  13. பின்பு அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்க்கவேண்டும்
  14. இப்பொழுது இன்னொரு அடுப்பில் மற்றொரு மண்சட்டியை வைக்க வேண்டும்
  15. அதில் அரைப்படி மணல் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்
  16. இப்பொழுது 90% தண்ணீர் வற்றியவுடன்.
  17. பிரியாணி மண்சட்டியை எடுத்து மணல் சட்டி மேல் வைக்க வேண்டும்
  18. அதன் மேல் மூடி போட்டு மேலே
  19. கனமான பாத்திரத்தை வைக்க வேண்டும்
  20. இப்பொழுது அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்க வேண்டும்
  21. மணக்கும் மண்சட்டி மட்டன் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்