மைசூர் பாக் | Mysore Pak in Tamil

எழுதியவர் Nancy Samson  |  5th Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mysore Pak by Nancy Samson at BetterButter
மைசூர் பாக்Nancy Samson
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2

0

மைசூர் பாக் recipe

மைசூர் பாக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Pak in Tamil )

  • கடலை மாவு -1கப்
  • பால் பவுடர் - 1 கப்
  • நெய் - 1+1/2 கப்
  • சர்க்கரை - 1+1/4 கப்
  • தண்ணீர் - 1/2 கப்

மைசூர் பாக் செய்வது எப்படி | How to make Mysore Pak in Tamil

  1. 2 மேசைக்கரண்டி நெய் விட்டு , ஒரு அடி கனமான பாத்திரத்தில் கடலை மாவை பச்சை வாசனை போக வறுத்து எடுக்கவும்.
  2. நெய்யை உருக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு குழிவான தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.
  4. கடலை மாவு மற்றும் பால் பவுடர் இரண்டையும் ஒன்றாக சலித்து ஒரு கப்பில் போட்டு வைக்கவும்.
  5. இதில் ஒரு கப் நெய்யை விட்டு கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, அரை கப் நீர் விட்டு ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
  7. மேலே உள்ள படத்தில் உள்ளவாறு நுரைக்கும்போது, கம்பி பதம் சரி பார்த்து, நெய்யில் கரைத்த பால் மற்றும் கடலை மாவை ஊற்றி கை விடாமல் கலக்கவும்.
  8. நெய் முழுதும் மாவு இழுத்தும், மீதமுள்ள அரை கப் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும்.
  9. இந்த கலவை கொப்பளித்து, கலர் வெளுத்து, நெய்யை இழுப்பதை நிறுத்தும்போது தீயை அனைத்து விடவும்.
  10. சிறிதும் தாமதிக்காமல், நெய் தடவிய தட்டில் ஊற்றி, சமன்படுத்தி செட் செய்யவும்.
  11. ஆறியதும் துண்டுகளாக வெட்டி , பரிமாறலாம். பாலபௌடர் மைசூர் பாக் தயார்.

எனது டிப்:

நான் குறைவான நெய் சேர்த்துள்ளேன், 2 அல்லது 2+1/2 கப் நெய் சேர்த்தால் இன்னும் மிருதுவாக இளகாக வரும்.

Reviews for Mysore Pak in tamil (0)