வீடு / சமையல் குறிப்பு / தேனீர் நேர வால்நட் கேக்

Photo of Teatime Almond Cake by Nancy Samson at BetterButter
556
1
0.0(0)
0

தேனீர் நேர வால்நட் கேக்

Jul-05-2018
Nancy Samson
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
55 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேனீர் நேர வால்நட் கேக் செய்முறை பற்றி

தேநீர் நேரங்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிடக்கூடிய சுவையான, ஆரோக்கியமான வால்நட் பருப்பு சேர்த்து கேக். வால்நட் பருப்பு உடலுக்கு ஆரோக்கியமானது. இதன் லேசான கசப்பு சுவையால் சிறுவர்கள் சாப்பிட அடம் செய்வர். இதில் கேக்கா செய்து கொடுத்தால் மேலும் இரண்டு துண்டு கேட்டு வாங்கி சாப்பிடுவர். ஸ்னாக்ஸ் டப்பாவில் கொடுத்தனுப்பலாம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1 + 1/2 கப்
  2. சிறிதாக உடைத்த வால்நட் - 1/2 கப்
  3. உப்பில்லாத வெண்ணெய் - 225கிராம்
  4. சர்க்கரை - 1கப்
  5. முட்டை - 6
  6. பால் - 3 மேசைக்கரண்டி
  7. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 தேக்கரண்டி
  8. பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி
  9. உப்பு - 1/8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கேக் தயாரிக்க தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
  2. ஓவன்-ஐ 350°f டிகிரி ப்ரீ ஹீட் செய்யுங்கள்.
  3. நீங்கள் கேக் தயாரிக்கபோகும் பாத்திரத்தில் முழுவதுமாக வெண்ணெய் தடவவும்.
  4. பின்னர் எல்ல இடங்களிலும் படுமாறு மைதா மாவைத் தூவி, சுற்றிலும்படுமாறு க்ரீஸ் அல்லது கோட் செய்யவும்.
  5. மீதமுள்ள மாவை ஒரு கப்பில் கொட்டி விடுங்கள்.
  6. இப்போது பேக்கிங் டிரே தயார்.
  7. ஒரு அகலமான பாத்திரத்தில், மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு மூடரையும் ஒன்றாக சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  8. இப்போது 6 முட்டைகளையும் உடைத்து, வெள்ளைக்கரு தனியாக ஒரு கப்பிலும், மஞ்சள் கரு தனியாக ஒரு கப்பிலும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  9. வெள்ளை கருவை ஒரு ப்ளெண்டர் கொண்டு நன்றாக அடியுங்கள். ப்ளேண்டேரில் ஊசி போல வெள்ளை கரு கிரீம் பதத்தில் ஒட்டியிருக்க வேண்டும். இட
  10. வேறொரு கப்பில், வெண்ணெயை ப்ளெண்டரில் அடிக்கவும், அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
  11. இதனுடன், பிரித்து வைத்துள்ள மஞ்சள் கரு சேர்த்து அடிக்கவும்.
  12. மஞ்சள் கரு நன்கு கலந்தும், பால் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
  13. இத்துடன் ட்ரய்(dry) பொருட்களை சேர்த்து மிருதுவாக வெண்ணெய் போல பளபளப்பாகும் வரை அடிக்கவும்.
  14. இந்த வெண்ணெய் கலவையுடன், அடித்து வைத்துள்ள வெள்ளைக்கருவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, ஒரு ஸ்பாசுலா(spatula) கொண்டு மெதுவாக மடித்து மடித்து கலந்து கொள்ளுங்கள்.
  15. வெள்ளைக்கருவை கலக்கும் போது, உடைத்த வால்நட் பருப்புகளை 1/4 கப் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  16. இந்த கலவையை , கிரீஸ் செய்து வைத்துள்ள பேக்கிங் பாத்திரத்தில் கொட்டி, சமன்படுத்துங்கள்.
  17. பாத்திரத்தை லேசாக தட்டி கேக் கலவையை செட் செய்யுங்கள்
  18. இப்போது மீதமுள்ள வால்நட்டை மேலே தூவி விடுங்கள்.
  19. ப்ரீ ஹீட் செய்த ஓவன்-இல் இந்த கேக் கலவை செட் செய்த பாத்திரத்தை வைத்து, 175°c வெப்ப அளவில் 50 முதல் 55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுங்கள்.
  20. சூடு ஆறியதும், கேக்-ஐ பாத்திரத்தில் இருந்து எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
  21. என்னிடம் பொருட்கள் குறைவாக இருந்ததால் , நான் மினி பிரெட் மோல்டு பாத்திரத்தில் செய்துள்ளேன்.
  22. மேல்கூறிய அவைகளில் செய்தல் ஒரு முழு பிரெட் லோப் (loaf) அளவு கிடைக்கும்.
  23. டிப்: காபி சுவை விரும்புவோர், வெண்ணைகலவையில் அடித்து வைத்த வெள்ளைகருவை சேர்ப்பதற்கு முன், 1மேசைக்கரண்டி இன்ஸ்டன்ட் காபி தூளை 2மேசைக்கரண்டி சூடு நீரில் கலந்து, வெண்ணெய் கலவியில் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். காபி சுவைகொண்ட வால்நட் கேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்