வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சீடை

Photo of Coconut seedai by Krishnasamy Vidya Valli at BetterButter
430
1
0.0(0)
0

தேங்காய் சீடை

Jul-09-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சீடை செய்முறை பற்றி

கிருஷ்ண ஜெயந்தியின் போது செய்யப்படும் நெய்வேத்யங்களில் முக்கியமான ஒன்று இது .ஒருவருக்கு நான்கு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு அரை கப்
  2. உளுந்து மாவு ஒரு மேசைக்கரண்டி
  3. தேங்காய் துருவல் 1/8 கப்+2 மேஜைக்கரண்டி
  4. சீரகம் ஒரு தேக்கரண்டி
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  7. வெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி மாவு உளுந்து மாவு மற்றும் உப்பு சேர்த்து வெறும் கடாயில் மாவை தொட்டால் சூடு வரும் வரை வறுக்கவும்
  2. தேங்காய் சீரகம் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்
  3. அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற வைத்து வெண்ணெய் மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து உருண்டையாக உருட்டி வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்