வீடு / சமையல் குறிப்பு / சிவப்பரிசிமாவு தேன் புட்டு

Photo of Redrice flour Honey Puttu by Sowmya Sundar at BetterButter
545
4
0.0(0)
0

சிவப்பரிசிமாவு தேன் புட்டு

Jul-13-2018
Sowmya Sundar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிவப்பரிசிமாவு தேன் புட்டு செய்முறை பற்றி

சிவப்பரிசி மாவை வேக வைத்து தேன் மற்றும் உலர்பழங்கள் கலந்து செய்த புட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு அரிசி-1 கப்
  2. பால் - 3/4 கப் + 1/4 கப் தண்ணீர்
  3. தேங்காய் துருவல்-1/4 கப்
  4. தேன்-2 டேபிள் ஸ்பூன்
  5. சர்க்கரை-1 டேபிள் ஸ்பூன்
  6. ஏலக்காய் பொடி-1/4 டீஸ்பூன்
  7. முந்திரி கிஸ்மிஸ்- 10
  8. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. சிவப்பரிசியை தண்ணீர் விட்டு களைந்து ஒரு துணியில் நிழலில் உலர்த்தி விடவும். பின்னர் மிஷினில் அல்லது மிக்சியில் பொடியாக செய்து கொள்ளவும்
  2. அரைத்த மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசறவும். பிடித்தால் பிடிக்கும் படியும் உதிர்த்தால் உதிரும் படியும் இருப்பது சரியான பதம்
  3. இந்த மாவை ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  4. பின்னர் உதிர்த்து தேங்காய் துருவல், தேன், முந்திரி, திராட்சை ,ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்