வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு பிரட் டோஸ்ட்

Photo of Besan bread toast by hajirasheed haroon at BetterButter
62
3
0.0(0)
0

கடலை மாவு பிரட் டோஸ்ட்

Jul-13-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

கடலை மாவு வெங்காயம் தக்காளி சேர்த்து செய்து காலை உணவாக சாப்பிடலாம் அல்லது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 4
  2. கடலை மாவு ஒரு கப்
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2ஸ்பூன்
  5. சீரகம் அரை டீஸ்பூன்
  6. பெருக்காயத் தூள் 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெரிய வெங்காயம் ஒன்று
  9. தக்காளி ஒன்று
  10. கொத்தமல்லி இலை சிறிது
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் கடலை மாவு உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சீரகம் சேர்த்துக் கொள்ளவும்
  2. மாவில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலை சேர்க்கவும்
  3. கடலை மாவு கலவையை ஒரு தட்டில் ஊற்றவும்
  4. அதில் பிரெட்டை நனைத்து எடுக்கவும்
  5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்து எடுக்கவும்
  6. ஈஸியான கடலை மாவு பிரட் டோஸ்ட் தயார்
  7. சட்னியுடனோ சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
  8. இதில் விருப்பம் இருந்தால் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்