வீடு / சமையல் குறிப்பு / மத்தூர் வடை

Photo of Maddur vada by jeyaveni chinniah at BetterButter
444
3
0.0(0)
0

மத்தூர் வடை

Jul-16-2018
jeyaveni chinniah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மத்தூர் வடை செய்முறை பற்றி

கர்நாடகா மத்தூரின் பிரபலமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு-1 கப்
  2. ரவை-1/2 கப்
  3. மைதா -1/4 கப்
  4. பெரியதாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  5. பச்சை மிளகாய் 3
  6. சிறியதாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கசகசா -1/2ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு ரவை மைதா மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. இரண்டு ஸ்பூன் எண்ணெயை சூடு செய்து அதில் சேர்க்கவும்
  3. நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் கசகசா கருவேப்பிலை மற்றும் இஞ்சியை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்
  4. ஒரு ஸ்பூன் தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்
  5. உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெய் தடவி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி சற்று தடிமனாக வட்டமாக தட்டிக் கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடவும்
  7. எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  8. வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சிறிது மென்மையாகவும் உள்ள சுவையான மத்தூர் வடையை சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்