வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் ரவா ரோஸ்ட்

Photo of Onion rava roast by Subashini Krish at BetterButter
372
0
0.0(0)
0

ஆனியன் ரவா ரோஸ்ட்

Jul-16-2018
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் ரவா ரோஸ்ட் செய்முறை பற்றி

மைதா மாவு அரிசி மாவு வெள்ளை ரவை சேர்த்து செய்யக்கூடிய எளிய சிற்றுண்டியாகும். தாளித்து சேர்க்கப்படும் வெங்காயம் மேலும் சுவையூட்டும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை ரவை ஒரு கப்
  2. மைதா மாவு அரை கப்
  3. அரிசி மாவு அரை கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. சர்க்கரை கால் தேக்கரண்டி
  6. பெரிய வெங்காயம் ஒன்று
  7. கடுகு அரை தேக்கரண்டி
  8. பச்சைமிளகாய் 2
  9. உடைத்த முந்திரி 10
  10. மிளகு 10
  11. சீரகம் அரை தேக்கரண்டி
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. கொத்தமல்லி தழை சிறிதளவு
  14. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு அரிசி மாவு ரவை உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நீர்க்க கரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் உடைத்த முந்திரி மிளகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
  4. இதை கரைத்து வைத்த மாவில் கொட்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  5. கீழ்கண்டவாறு ரவா தோசையை தயார் செய்யவும். 1. ஒரு தட்டையான தோசைக்கல்லை நன்கு காய வைத்து மாவை தெளித்தாற்போல் ஊற்றவும்
  6. 2. சிறிது எண்ணெய் சுற்றிலும் விடவும்
  7. 3.மூடி வைத்து மிதமான தீயில் வேகா வைக்கவும்
  8. நன்கு பொன்முறுகலாக வெந்தபின் திருப்பாமல் மடக்கி எடுக்கவும்
  9. தேங்காய் சட்னி அல்லது விருப்பமான சட்னியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்