அகுரி | Akuri in Tamil

எழுதியவர் Sujata Limbu  |  18th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Akuri by Sujata Limbu at BetterButter
அகுரிSujata Limbu
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

396

0

அகுரி recipe

அகுரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Akuri in Tamil )

  • 1 நன்றாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 சிறிய தக்காளி நன்றாக நறுக்கியது (தேவையென்றால்)
  • 1 நடுத்தர அளவு வெங்காயம் நன்றாக நறுக்கியது
  • 6 முட்டை
  • 45 மிலி பால்
  • 40 கிராம் வெண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  • 1/2 டீக்கரண்டி மஞ்சள்தூள்
  • இடித்த மிளகு
  • 6 வறுத்த ரொட்டி துண்டுகள்
  • சுவைக்கேற்ப உப்பு
  • அலங்கரிக்க சில நன்றாக நறுக்கிய கொத்தமல்லி இலை

அகுரி செய்வது எப்படி | How to make Akuri in Tamil

  1. வாணலியில் குறைந்த வெப்பத்தில் வெண்ணையை விட்டு சூடுசெய்துக் கொள்ளவும்
  2. அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
  3. இதற்க்குக்கிடையில், கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கலந்துக் கொள்ளவும். பின் தனியாக வைத்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் சீரகத்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்துக் கொள்ளவும். அதை 2-3 நிமிடம் வேகவிடவும்.
  5. வாணலியில் முட்டையை ஊற்றி தொடர்ச்சியாக கலவையை கிளறி விடவும்.
  6. முட்டை கிரீம் போன்று தடிமனாகும் வரை தொடர்ச்சியாக கிளறவும்.
  7. பரிமாறும் தட்டில் 6 வறுத்த ரொட்டி துண்டுகளை வைத்துக் கொள்ளவும். வறுத்த ரொட்டி துண்டுகள் மீது அக்குரியை கவனமாக வைத்துக்கொள்ளவும்.
  8. கொத்தமல்லி இலையைக் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Reviews for Akuri in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்