வீடு / சமையல் குறிப்பு / குருமா குழம்பு

Photo of Kurma kulambu by Margaret Charles at BetterButter
1587
0
5.0(0)
0

குருமா குழம்பு

Jul-17-2018
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குருமா குழம்பு செய்முறை பற்றி

சைவ சாப்பாடை அசைவ விரும்பிகளுக்கு கொடுப்பதற்காக நான் இதை செய்ய தொடங்கினேன். போக போக இது அமிர்தமாக மாறியது. தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் உபயோகிக்கலாம் என்பதால் நானும் அடிக்கடி செய்து விடுவேன்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 2 பொடிதாக நறுக்கியது
  2. பச்சை மிளகாய் 2 கீறியது.
  3. இஞ்சி பூண்டு விழுது 1 மே க
  4. தக்காளி 1 பொடிதாக நறுக்கியது
  5. கேரட் 2 சற்று பெரிய துண்டுகளாக வெட்டவும்
  6. உருளை 2 சற்று பெரிய துண்டுகளாக வெட்டவும்
  7. பட்டர் பீன்ஸ் 1 கப்
  8. பீன்ஸ் 4 வெட்டியது
  9. மஞ்சள் பொடி 1 தே க
  10. மிளகாய் பொடி 2 தே க
  11. மல்லி பொடி 1 தே க
  12. கரம் மசாலா 3/4 மே க
  13. தேங்காய் துருவல் 1/2 கப்
  14. ஜீரகம் 1 தே க
  15. பெருஞ்சீரகம் 3/4 மே க
  16. கசகசா 1/2 தே க
  17. பட்டை 1/2 "
  18. கிராம்பு 2
  19. ஏலக்காய் 3
  20. பே லீப் 1/2
  21. கருவேப்பில்லை சிறிதளவு
  22. புதினா கொத்தமல்லி இலை (இரண்டும் சேர்த்து) 1/2 கப்
  23. நல்லெண்ணெய் 2 மே க

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பே லீப் போட்டு வதக்கவும்
  2. பின்னர் கருவேப்பில்லை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மனம் மாறும் வரை வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும்.
  5. காய்கறிகள் சேர்த்து 2-3 நிமிடங்கள் பிரட்டவும்
  6. புதினா கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டவும்
  7. பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி , மல்லி பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்
  8. மிக்ஸியில் தேங்காய், சீரகம், பெருஞ்சீரகம், கசகசா சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  9. காய்கறிகளுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  10. தண்ணீர் நன்கு கொதித்த பின், கரம் மசாலா சேர்க்கவும். நன்கு கலந்து விட்டு அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.
  11. உப்பை சரி பார்த்து, 3 விசில் வேக வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்