வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு பால் கொழுக்கட்டை

Photo of Wheat flour paal kazhukattai by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
756
4
5.0(0)
0

கோதுமை மாவு பால் கொழுக்கட்டை

Jul-17-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

பால் கொழுக்கட்டை அரிசி மாவை வைத்து தான் பெரும்பாலும் செய்வோம். ஒரு மாறுதலுக்கு கோதுமை மாவை வைத்து செய்யும் செய்முறையை இங்கு பார்க்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு -1 கப்
  2. பால் -2 கப்
  3. தேங்காய் பால் -1 கப்
  4. கருப்பட்டி -1 கப்
  5. முந்திரி - 6
  6. ஏலக்காய் -2
  7. தேங்காய் - சிறிதளவு பொடியாக நறுக்கியது
  8. நெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கோதுமை மாவை ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் போட்டு நன்கு கோதுமை வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் கருப்பட்டியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
  4. இப்பொழுது வறுத்து மாவு சூடு ஆறியவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  5. பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக அல்லது விரும்பிய வடிவில் உருட்டுக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் அதில் பாலை ஊற்றி ,ஏலக்காய் சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  7. பால் நன்கு காய்ந்ததும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து வேக விடவும்.
  8. உருண்டைகள் நன்கு வெந்ததும் அதனுடன் கருப்பட்டி பாகினை சேர்த்து நன்கு வேக விடவும்
  9. நன்கு வெந்து பால் கெட்டியாக வந்ததும் அதனுடன் 1கப் தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
  10. இறுதியாக முந்திரி, தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்த்து லேசாக கிளறி அடுப்பில் இருந்து எடுக்கவும்.
  11. இப்பொழுது சுவையான கோதுமை மாவு பால் கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்