வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு பிட்டு

Photo of Moong dal pittu by Saivardhini Badrinarayanan at BetterButter
352
1
0.0(0)
0

பாசிப்பருப்பு பிட்டு

Jul-18-2018
Saivardhini Badrinarayanan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு பிட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான புரத சத்து மிகுந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1 கப்
  2. கடுகு 1 மேஜைக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு 1 மேஜைக்கரண்டி
  4. பச்சைமிளகாய் 2
  5. கருவேப்பிளை சிறிதளவு
  6. தேங்காய் துருவல் 1/4 கப்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸியில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  3. பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்த மாவை ஊற்றி நன்கு 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  4. பின் இட்லியை நன்கு ஆற வைக்கவும்.
  5. பின் நன்கு பொடித்து கொள்ளவும்.(விருப்பப்பட்டால் மிக்ஸியில் ஒரு முறை அடித்து பொடித்து கொள்ளவும்)
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கடுகு,உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  7. பின் பொடித்த பாசிப்பருப்பு இட்லியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  8. பின் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்