வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சோள கட்லெட்

Photo of Sweet corn crispy cutlet by Karuna Pooja at BetterButter
357
4
0.0(0)
0

இனிப்பு சோள கட்லெட்

Jul-18-2018
Karuna Pooja
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சோள கட்லெட் செய்முறை பற்றி

மக்காச்சோளத்தை அடிப்படையாகக் கொண்ட கட்லட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோள முத்துக்கள் ஒரு கப்
  2. சிவப்பு அவல் அரை கப்
  3. உருளைக்கிழங்கு 50 கிராம்
  4. பச்சை மிளகாய் 5
  5. சீரகப் பொடி 1/2 ஸ்பூன்
  6. சாட் மசாலா 1/2 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  9. மல்லி தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. மைதா 3 ஸ்பூன்
  12. எண்ணெய் பொரிக்க
  13. சேமியா 50 கிராம்

வழிமுறைகள்

  1. சிவப்பு அவல் மிக்சியில் எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. முதலில் நைசாக மாவு போல பொடிக்கவும்
  3. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும்
  4. சோள முத்துகளையும் ,பச்சை மிளகாயையும் மிக்ஸியில் எடுக்க
  5. கொரகொரப்பாக சோளம் , பச்சை மிளகாய் இவற்றை அரைக்கவும்
  6. மசித்த உருளைக்கிழங்கை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து
  7. மக்காச்சோளத்தின் அரைத்த விழுதையும் சேர்க்க
  8. பொடித்த அவுலையும் சேர்க்க
  9. சீரகத்தூள், கரம்மசாலா தூள், சாட் மசாலா தூள், மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் போன்றவையும்
  10. உப்பு, மல்லி தூள் சேர்த்து
  11. நன்கு பிசைந்து
  12. விரும்பிய வடிவங்களில் பிடித்து தட்டில் அடுக்கவும்.
  13. மைதா மாவினை தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.
  14. சேமியாவின் உடைத்து தட்டில் பரப்பி வைக்கவும்.
  15. கட்லெட்டினை மைதா மாவில் தோய்த்து.
  16. சேமியாவில் பிரட்டி எடுக்கவும்.
  17. இதனை அரை மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து.
  18. பின்பு வெளியில் எடுத்து அறையின் வெப்பநிலைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
  19. மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் சேர்க்க.
  20. பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  21. தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் உடன் சுவைக்க , ஆரோக்கியமான கட்லெட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்