வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ஸ்ப்ரிங் ரோல்

Photo of chicken spring roll by Apsara Fareej at BetterButter
310
2
0.0(0)
0

சிக்கன் ஸ்ப்ரிங் ரோல்

Jul-18-2018
Apsara Fareej
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ஸ்ப்ரிங் ரோல் செய்முறை பற்றி

இது நான் வீட்டிலேயே ஸ்ப்ரிங் ரோல் ஷீட் செய்து செய்திருக்கின்றேன். இந்த ஸ்டஃபிங்கை கொண்டு ரெடிமேட் ஷீட்டிலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஸ்டஃபிங்கிற்கு:-)
  2. எலும்பில்லா சிக்கன் - 200 கிராம்
  3. முட்டைகோஸ் நீளவாக்கில் நறுக்கியது - 1 கப்
  4. கேரட் நீளவாக்கில் அரிந்தது -சிறிதளவு
  5. பச்சைமிளகாய் - 2
  6. ஸ்பிரிங் ஆனியன்
  7. எண்ணெய் - 2 தேக்கரண்டி + பொறித்தெடுக்க
  8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  9. சோயா சாஸ் (லைட்) - 2 மேசைக்கரண்டி
  10. உப்பு - தேவைக்கேற்ப
  11. ஷீட்டிற்கு:-)
  12. மைதா மாவு - 1 கப்
  13. கார்ன்ஃப்ளார் மாவு - 2 மேசைக்கரண்டி
  14. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  15. உப்பு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் வேகும் அளவிற்கு ஊற்றி, மஞ்சள்த்தூள் சிறிது வேக வைக்கவும்.அதற்குள் நாம் மாவு பிசைந்து விடலாம்.
  2. அகன்ற பாத்திரத்தில் மாவுகள் சேர்த்து , அதில் உப்பும் , எண்ணெயும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சாஃப்ட்டாக பிசைந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது மூடி வைக்கவும். அதற்குள் நம் உள்ளடம் செய்து விடலாம்.
  3. காய்கள் நீளவாக்கில் அரிந்து கொண்டும், பச்சைமிளகாயை பொடியாக அரிந்தும், ஸ்பிரிங் ஆனியனின் முனையில் இருக்கும் வெள்ளை பகுதியை காய்களுடன் அரிந்து வைத்து கொண்டு, மீதி பகுதியை தனியே கொஞ்சம் நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும்.
  4. ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சிக்கன் மற்றும் வெங்காயதாள் தவிர்த்து மற்ற காய்களை சேர்த்து ,
  5. பிறகு பிடைந்த மாவில் சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கினால் 10 உருண்டைகள் போடலாம். அதை 3+3+2+2 எனபிரித்து வைத்து கொண்டு, முதலில் ஒரே அளவு பூரி சைஸில் தொடு மாவு போட்டு தேய்த்து கொண்டு, பின்பு ஒவ்வொன்றின் மேலும் எண்ணெயை முழுவதுமாக தடவி விட்டு அதன் மேல் சிறிது மாவை பரவலாக தூவி தடவி விட்டு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கவும்.( மூன்றாவதை எண்ணெய் தடவிய பகுதியை கொண்டு மூட வேண்டும்)
  6. இப்போது அதனை தொடு மாவு கொண்டு எல்லா பாகமும் மெவ்ல்லிதாக பெரிதாக தேய்க்கவும். தாவாவை சூடு செய்து , அதில் இந்த தேய்த்த ஷீட்டை போட்டு குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வைக்கவும். சிவக்காமல் லேசாக அடி வெந்தது போன்று ஆனதும், திருப்பி போட்டு மறு பக்கமும் அவ்வாறு வைத்து எடுத்து விடவும்.
  7. பின்பு அதன் ஓரங்களை கட் பண்ண வேண்டும். அப்போது ஈஸியாக மூன்று ஷீட்டையும் தனி தனியாக எடுக்க வந்து விடும். இதே போன்று எல்லாவற்றையும் செய்து வைத்து கொள்ளவும்.
  8. இப்போது ஒரு ஷீட்டினை முக்கோண வாக்கில் வைத்து கொண்டு அதில் படத்தில் உள்ளது போன்று உள்ளடம் வைக்கவும். பிறகு அதனை டைட்டாக மடிக்கவும். மூடும் முன் நுனியில் மைதாவை தண்ணீருடன் கலந்த பேஸ்டை தடவி விட்டு மூடிவிடவும். இதே போன்று எல்லாவற்றையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
  9. எண்ணெயை சூடு செய்தி அதனை மிதமான தீயில் வைத்து கொண்டு இரண்டு மூன்றாக போட்டு பொன்னிறமாக எடுத்தால் சூப்பரான சிக்கன் ஸ்ப்ரிங் ரோல் ரெடி. க்ரிஸ்பியா, சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்