வெங்காய பகோடா | Onion pakOda in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  22nd Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Onion pakOda by Kamala Nagarajan at BetterButter
வெங்காய பகோடாKamala Nagarajan
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

2

0

வெங்காய பகோடா recipe

வெங்காய பகோடா தேவையான பொருட்கள் ( Ingredients to make Onion pakOda in Tamil )

 • கடலை மாவு 2-1/2 கரண்டி
 • அரிசி மாவு 1 கரண்டி
 • காரப்பொடி 1/2 டீஸ்பூன்
 • உப்பு தேவைக்கு
 • பச்சை மிளகாய் 1
 • வெங்காயம் 1
 • கறிவேப்பிலை 1 கொத்து
 • எண்ணை பொறிக்க

வெங்காய பகோடா செய்வது எப்படி | How to make Onion pakOda in Tamil

 1. வெங்காயம் நீளமாக நறுக்கவும்
 2. பச்சை மிளகாய் நறுக்கி உப்பு சேர்க்கவும்
 3. நன்றாக பிசையவும்
 4. தண்ணீர் விட்டுக்கொள்ளும்
 5. கடலமாவு, அரிசி மாவு ,காரப்பொடி,காய்ந்த எண்ணை 1/2 கரண்டி ஊற்றி பிசையவும்
 6. தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துகொள்ளவும்
 7. நன்றாக பிசயவும்
 8. எண்ணை காய வைத்து சின்னதாக கிள்ளி போட்டு பொறிக்கவும்

எனது டிப்:

கடலை எண்ணையாக இருந்தால் காய்ச்சும் போது முதலில் சின்ன உருண்டை புளி போட்டு விட்டு பிறகு பக்கோடா போடவும் எண்ணை பொங்காது

Reviews for Onion pakOda in tamil (0)