வீடு / சமையல் குறிப்பு / அரேபியன் மந்தி

Photo of Arabian Mandhi by Firthous Iffhnu Ifrah at BetterButter
715
2
0.0(0)
0

அரேபியன் மந்தி

Jul-23-2018
Firthous Iffhnu Ifrah
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரேபியன் மந்தி செய்முறை பற்றி

அரேபியன் ஸ்டைல் சுவையான மந்தி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி: 2 கப்
  2. முழு கோழி(மூன்ராக வெட்டியது): 1
  3. பெரிய வெங்காயம் : 2
  4. பட்டை கிராம்பு ஏலக்காய்: 2
  5. பிரிஞ்சி இலை லவங்கம்: 1
  6. அன்னாசிப் பூ: 1
  7. மஞ்சள் தூள்: 1/2 ஸ்பூன்
  8. மிளகாய் தூள்: 1 ஸ்பூன்
  9. கரம் மசாலா : 1 1/2 ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது: 2 ஸ்பூன்
  11. தயிர்: 1/2 கப்
  12. உப்பு :தேவையான அளவு
  13. எண்ணெய்: 3 ஸ்பூன்
  14. நெய் : 2 ஸ்பூன்
  15. மல்லி புதினா: தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. ஒரு அகன்ட பாத்திரத்தை சூடு செய்யவும். அதில் எண்ணெய் நெய் சேர்க்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு லவங்கம் பிரிஞ்சி இலை அன்னாசிப் பூ அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. 2. முழு கோழியினை சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும்
  3. 3. அதில் 5 கப் அளவு தண்ணீர் சேர்க்கவும். அது கொதித்தவுடன் வெட்டி வைத்த கோழியை அதில் போட்டு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்
  4. 4. பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு அதனை இரண்டாகவோ மூன்றாகவோ வெட்டி அப்படியே எண்ணெயில் சேர்க்கவும். மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் சேர்க்கவும்
  5. 5. தண்ணீரிலிருந்து கோழியை எடுத்து தனியே வைக்க வேண்டும்
  6. 6. பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  7. 7. கோழி வெந்த நீரில் உள்ள பட்டை ஏலக்காய் கிராம்பு லவங்கம் வெங்காயம் அனைத்தையும் ஒரு கரண்டியினால் எடுத்துவிட வேண்டும்
  8. 8. ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை அதே நீரில் போட்டு தம் வைக்கவும்
  9. 9. அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  10. 10. எடுத்து வைத்துள்ள கோழியில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி ஊர வைக்கவும்
  11. 11. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்துள்ள கோழியை பொரித்து எடுக்கவும்
  12. 12. தம் ஆன மந்தியின் மேல் கோழியை வைத்து அதன் மேல் மல்லி புதினா தூவி ஒரு 10 நிமிடம் தம்மில் வைக்கவும்
  13. 13. சுவையான மந்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்