Photo of Keerai masala by kamala shankari at BetterButter
620
2
0.0(0)
0

கீரை மசாலா

Jul-23-2018
kamala shankari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை மசாலா செய்முறை பற்றி

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஏதேனும் ஒரு கீரை 1 கட்டு
  2. வெங்காயம் 1
  3. எண்ணெய் 2 தேக்கரண்டி
  4. கடுகு 1/2 தேக்கரண்டி
  5. உளுந்து 2 தேக்கரண்டி
  6. பச்சரிசி 1/2 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி 1 கைப்பிடி
  8. பச்சை மிளகாய் 1
  9. இஞ்சி சிறிய துண்டு
  10. பூண்டு 2 பல்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  3. உளுந்து அரிசியை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்
  4. கொத்தமல்லி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அரைத்து கொள்ளவும்
  5. எண்ணெயில் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  7. பின் நறுக்கிய கீரை உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்
  8. கீரை வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்