வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கபாப்

Photo of chicken kabab by shadiqah hasana at BetterButter
1381
2
0.0(0)
0

சிக்கன் கபாப்

Jul-24-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கபாப் செய்முறை பற்றி

சற்றே மெனக்கெட்டாலும் அருமையான ஸ்டார்டர்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் 1 கிலோ
  2. தயிர்1 கப்
  3. எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
  4. மிளகுத்தூள் 1/2 தேக்கரண்டி
  5. தந்தூரி மசாலா 2 டேபிள் ஸ்பூன்
  6. புதினா கைப்பிடி அளவு
  7. மல்லி கைப்பிடி அளவு
  8. பச்சை மிளகாய் 4
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 மேசைக்கரண்டி
  10. உப்பு சுவைக்கேற்ப
  11. வெங்காயம் 1
  12. குடை மிளகாய் 1

வழிமுறைகள்

  1. சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. தயிர் உப்பு இஞ்சிபூண்டு பேஸ்ட் எலுமிச்சை சாறு சேர்த்து மூன்று பாகங்களாக பிரிக்கவும்
  3. ஒரு பாகத்தில் மேலும் சிறுது தயிர் மிளகுத்தூள் சேர்த்து பிசிறவும்
  4. மற்றொரு பாகத்தில் சிக்கன் டிக்கா மசாலா கலக்கவும்
  5. புதினா மல்லி பச்சைமிளகாயை விழுதாக அரைத்து மற்றொரு பாகத்தில் பிசறி வைக்கவும்
  6. இந்த கலவை குறைந்தது மூன்று மணி நேரம் ஊற வைத்தால்தான் கபாப் மிருதுவாக இருக்கும் அல்லது முதல் நாளே தயார் செய்து ப்ரீஸரில் வைக்கலாம்
  7. வெங்காயத்தை எட்டாக நறுக்கி இதழ்இதழாக பிரித்தெடுக்கவும்
  8. குடை மிளகாயை சதுரதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
  9. கபாப் ஸ்டிக்கை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து விட்டு மூன்று வகை சிக்கனையும் இடை இடையில் வெங்காயம் குடை மிளகாய் துண்டுகளையும் வருசையாக செருகவும்
  10. முற்சூடு படுத்திய அவனில் வேகும் வரை க்ரில் செய்யவும்
  11. அருமையான் ஸ்டார்டர்.விருந்தோம்பலுக்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்