வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மொகலாய்

Photo of Chicken mughlai by Abinaya bala at BetterButter
265
2
0.0(0)
0

சிக்கன் மொகலாய்

Jul-25-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மொகலாய் செய்முறை பற்றி

சிக்கன் மற்றும் பிரஷ் க்ரீம் வைத்து செய்யப்படும் ஒரு வகையான கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் அரை கிலோ
  2. வெங்காயம் 2
  3. முந்திரிபருப்பு 10
  4. பாதாம் பருப்பு 10
  5. தயிர் ஒரு கப்
  6. ஃப்ரெஷ் க்ரீம் ஒரு கப்
  7. பச்சை மிளகாய் 3
  8. பூண்டு 4 பல்
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  10. பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ தலா 2
  11. ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன்
  12. புதினா கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. ப்ரஷ் க்ரீம் மற்றும் தயிரை ஒன்றாக சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்
  2. வாணலியில் ஆலிவ் ஆயில் சேர்த்து வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாக வதக்கவும்
  3. பின் அதனுடன் புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  5. பின் அதனுடன் இந்த வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  6. மற்றொரு வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் ஊற்றி சிக்கனை சேர்த்து வதக்கவும்
  7. அரைத்த கலவையை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்
  8. பின்னர் கலந்து வைத்த தயிர் மற்றும் ஃப்ரெஷ் க்ரீமை இதனுடன் சேர்க்கவும்
  9. சிக்கன் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்
  10. சுவையான சிக்கன் முகலாய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்