வீடு / சமையல் குறிப்பு / ரத ஸப்தமி ஸ்பெஷல்

Photo of Radha sapathami spl by Balajayasri Dhamu at BetterButter
588
0
0.0(0)
0

ரத ஸப்தமி ஸ்பெஷல்

Jul-25-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரத ஸப்தமி ஸ்பெஷல் செய்முறை பற்றி

ரத ஸப்தமி அன்று பூஜை அறையில் ரதம்(தேர்) வரைந்து தேங்காய் பழ தட்டுடன் பால் பொங்கல் சக்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் பொங்கல் தேவையான பொருள்
  2. பச்சரிசி 1டம்ளர்
  3. பால்1லிட்டர்
  4. உப்பு தேவையான அளவு
  5. சக்கரை பொங்கல்
  6. பச்சரிசி1டம்ளர்
  7. பாசிபருப்பு1/2டம்ளர்
  8. வெல்லம் பொடித்தது1டம்ளர்
  9. பால்1 /2முதல் 1லிட்டர் வரை
  10. ஏலக்காய் தூள்1/2ஸ்பூன்
  11. நெய்3ஸ்பூன்
  12. உலர்ந்ததிராட்சை10
  13. முந்திரி10

வழிமுறைகள்

  1. பால் பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் சந்தனம், குங்குமம் வைத்து கொண்டு
  2. முதலில் பாலை ஊற்ற வேண்டும் பால் பொங்கி வரும் போது
  3. அரிசி கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் அந்த அரிசியை பாத்திரத்தில்போடவும்
  4. நன்றாக கிளறி விடவும்
  5. நன்கு சாதம் வெந்ததும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  6. இப்போது பால் பொங்கல் ரெடி
  7. சக்கரை பொங்கல்
  8. அதேபோல் பாத்திரத்தில் சந்தனம், குங்குமம் இட்டு பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும்
  9. பால் பொங்கி வரும் போது அரிசியை போட வேண்டும்
  10. கழுவி சுத்தம் செய்த பாசிபருப்பு போட வேண்டும்.
  11. பின்னர் தேவை என்றால் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்
  12. நன்றாக சாதம் வெந்த உடன்
  13. பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும்
  14. ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  15. வாணலியில் நெய் ஊற்றி உலர்ந்த திராட்சை பழம், முந்திரி,சேர்த்து வறுத்து கொள்ளவும்
  16. அதை பொங்கல் பாத்திரத்தில் போட்டு கிளறவும்
  17. இப்போது சக்கரை பொங்கல் ரெடி
  18. சுவாமி படத்தில் அருகே தேர் கோலம் போட்டு பக்கத்தில் இலை போட்டு சக்கரை பொங்கல், பால் பொங்கல் பரிமாறவும்
  19. பொங்கல் பரிமாறி உடன் மேலே வாழைப்பழம், வெல்லம் வைத்து நைவேத்தியம் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்