வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் பிஸ்கட் ரோல்

Photo of Dates Biscuit Roll by Zainab Fazeela at BetterButter
316
2
0.0(0)
0

டேட்ஸ் பிஸ்கட் ரோல்

Jul-26-2018
Zainab Fazeela
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் பிஸ்கட் ரோல் செய்முறை பற்றி

பேரிச்சம் பழம்,பட்டர்/நெய் மற்றும் marie பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃப்ரீஸிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பேரிச்சம் பழம் ½ கிலோ(seedless)
  2. பவுடர் சீனி ½ கப்
  3. பட்டர்/நெய் 100 கிராம்
  4. பால் 1 சிறிய டம்ளர்(150மில்லி)
  5. Marie பிஸ்கட் 20

வழிமுறைகள்

  1. பேரிச்சம் பழத்தை சிறிய துண்டுகளாக கட் செய்து வைக்க வேண்டும்
  2. வாணலியில் பவுடர் சீனி போட்டு பிறகு பட்டர்/நெய் சேர்க்கவும் சீனி கரைந்ததும்
  3. பேரிச்சம் பழத்தை போட்டு கிண்டி விடவும் (முதலில் கிண்டுவதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் நன்கு மசிந்ததும் ஈஸியாக இருக்கும் )
  4. 15 நிமிடம் குறைந்த தணலில் வைத்து மிக்ஸ் செய்து கொண்டே இருக்க வேண்டும்
  5. பிறகு பாலை ஊற்றி கிண்டவும் பால் பேரிச்சம் பழத்தோடு கலந்து மிருதுவாக ஆனதும்.
  6. அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஒரு பிஸ்கட்டை நான்கு துண்டுகள் வீதம் 20 பிஸ்கட்களையும் உடைத்து அதில் போட வேண்டும்
  7. நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும் (விருப்பப்பட்டால் நட்ஸ் மற்றும் வருத்த ஓட்ஸ் சேர்க்கலாம்)
  8. சில்வர் ஃபாயில் பேப்பர் எடுத்து அதில் செய்த ஸ்வீட்ஸை வைத்து கையை கொண்டு மெதுவாக ரோல் செய்யவும்
  9. இந்த ரோலினை ஃப்ரிட்ஜில் குறைந்தது 3 மணி நேரம் வைக்கவும்
  10. 3 மணி நேரத்திற்கு பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து துண்டுகளாக வெட்டி நம் தேவைக்கு எடுத்துகொள்ளவும்
  11. ஈஸியான மற்றும் சுவையான டேட்ஸ் ஸ்வீட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்