வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குருமா

Photo of Spicy mutton curry by Meera Ansari at BetterButter
126
1
0.0(0)
0

மட்டன் குருமா

Jul-27-2018
Meera Ansari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குருமா செய்முறை பற்றி

எங்கள் குடும்பத்தில் விசேஷ தினங்களில் ஸ்பெஷலாக செய்யப்படும் ஒரு பாரம்பரிய குருமா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம் 2 கப்
  2. தக்காளி-3
  3. பச்சை மிளகாய் 8
  4. மட்டன் அரை கிலோ
  5. இஞ்சி பூண்டு விழுது 3 மேஜைக்கரண்டி
  6. ஏலக்காய் 5
  7. கிராம்பு நான்கு
  8. பட்டை சிறிதளவு
  9. சீரகம் அரை மேசைக்கரண்டி
  10. பெருஞ்சீரகம் அரை மேசைக்கரண்டி
  11. கசகசா ஒரு மேசைக்கரண்டி
  12. தேங்காய் ஒரு கப்
  13. நெய் 2 மேசைக்கரண்டி
  14. நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  15. தயிர் ஒரு கப்
  16. மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி
  17. மிளகு தூள் அரை மேசைக்கரண்டி
  18. உப்பு சுவைக்கேற்ப
  19. புதினா மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கசகசாவை வெந்நீரில் ஊற வைக்கவும்
  2. குக்கரில் நெய் ஊற்றி சின்ன வெங்காயம் பச்சைமிளகாயை பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்
  3. நன்கு ஆற விடவும்
  4. மிக்ஸியில் ஒரு அடி அடித்துக் கொள்ளவும்
  5. இஞ்சி பூண்டு விழுதுடன் ஏலக்காய் பட்டை கிராம்பு சீரகம் பெருஞ்சீரகத்தை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
  6. குக்கரில் நல்லெண்ணெய் விட்டு வெங்காய கலவையை போட்டு நன்கு வதக்கவும்
  7. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  8. தக்காளியை சேர்க்கவும்
  9. மல்லி புதினாவை சேர்க்கவும்
  10. மிளகுத் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  11. மல்லிப் பொடியை சேர்த்து வதக்கவும்
  12. பச்சை மிளகாய் காரம் இருப்பதனால் மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை
  13. உப்பு சேர்க்கவும்
  14. மட்டனை சேர்த்து நன்கு கலக்கவும்
  15. தயிர் சேர்த்து நன்கு வதக்கி குக்கரில் 5 விசில் விடவும்
  16. கசகசாவை மிக்ஸியில் மையாக நன்கு அரைத்துக் கொள்ளவும்
  17. மட்டன் நன்கு வெந்த உடன் கசகசாவை போடவும்
  18. கசகசா நன்கு கொதித்தவுடன் தேங்காயை மையாக அரைத்து அதில் கலக்கவும்
  19. தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த உடன் சுவையாக நெய் சோறு அல்லது சப்பாத்தி,இடியாப்பத்திற்கு பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்