வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு

Photo of Peerkangai Poricha Kuzhambu by Sowmya Sundar at BetterButter
1243
0
0.0(0)
0

பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு

Jul-28-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு செய்முறை பற்றி

பீர்க்கங்காய்,பருப்பு மற்றும் வறுத்து அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து செய்த குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய்- 2 கப்(தோல் சீவி நறுக்கியது)
  2. பெரிய வெங்காயம்-1 நறுக்கியது
  3. துவரம் பருப்பு-1/4 கப்
  4. பாசிப்பருப்பு-1/4 கப்
  5. தக்காளி-2
  6. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  7. கடுகு-1 டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை-சிறிது
  10. பெருங்காய பொடி -1/4 டீஸ்பூன்
  11. வறுத்து அரைக்க
  12. தேங்காய்-1/4 கப்
  13. உளுத்தம்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  14. மிளகு-1 டீஸ்பூன்
  15. சீரகம்-1 டீஸ்பூன்
  16. மிளகாய் வற்றல்-2

வழிமுறைகள்

  1. குக்கரில் பீர்க்கங்காய், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரை வேக வைத்து கொள்ளவும்
  2. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைத்து கொள்ளவும்
  3. அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் அதில் வேக வைத்த பீர்க்கங்காய் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
  5. பொரிச்ச குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்