வீடு / சமையல் குறிப்பு / கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

Photo of Karunai kilangu Pullikulambu by hajirasheed haroon at BetterButter
562
2
0.0(0)
0

கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

Jul-30-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருணைக்கிழங்கு புளிக்குழம்பு செய்முறை பற்றி

சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருணைக்கிழங்கு 1/4கிலோ
  2. சின்ன வெங்காயம்-200 கிராம்
  3. தக்காளி-3
  4. பூண்டு-10 பல்
  5. புளிக்கரைசல் ஒரு கப்
  6. கடுகு சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. மிளகாய்த்தூள்-2டீஸ்பூன்
  10. மல்லித் தூள் 4 ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருணைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  5. கொதித்து குழம்பு கலவையில் புளிக்கரைசல் ஊற்றி வேக வைத்த கருனைகிழங்கு சேர்த்து மீண்டும் நன்கு திக்காக வரும் வரை கொதிக்க விடவும்
  6. சுவையான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு தயார்
  7. விருப்பம் இருந்தால் தேங்காய் அரைத்து ஊற்றலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்