வீடு / சமையல் குறிப்பு / கருப்பு வெள்ளை கிரேவி

Photo of Black and White Gravy by Sowmya Sundar at BetterButter
101
0
0.0(0)
0

கருப்பு வெள்ளை கிரேவி

Jul-31-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருப்பு வெள்ளை கிரேவி செய்முறை பற்றி

கருப்பு கொண்டைகடலையை வெள்ளை நிற தேங்காய் மசாலா மற்றும் பால் சேர்த்து செய்த கிரேவி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு கொண்டைகடலை -1 கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு-1
  3. பெரிய வெங்காயம்-1 நறுக்கியது
  4. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  5. கடுகு-1 டீஸ்பூன்
  6. சீரகம்-1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை- சிறிது
  8. பால் -1/2 கப்
  9. உப்பு -தேவையான அளவு
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. அரைக்க தேவையானவை :
  12. தேங்காய் துருவல்-1/2 கப்
  13. பாதாம் பருப்பு-4
  14. முந்திரி பருப்பு-4
  15. சின்ன வெங்காயம்-6
  16. பச்சை மிளகாய்-2
  17. பூண்டு-3 பல்
  18. பட்டை-1 துண்டு
  19. கிராம்பு-2

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை தண்ணீர் விட்டு பத்து மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்(காலையில் செய்வதானால் இரவில் ஊற வைக்கலாம்)
  2. பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்
  3. குக்கரில் கடலையை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்
  4. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  5. கடாயில் வெண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. பின்னர் அதனுடன் அரைத்த விழுது, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், கொண்டைகடலை மற்றும் பால் சேர்த்து நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
  7. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்