வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ்

Photo of Schezwan chicken fried rice by hajirasheed haroon at BetterButter
1590
3
0.0(0)
0

செஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ்

Jul-31-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்முறை பற்றி

செஷ்வான் சாஸ் பாஸ்மதி அரிசி சிக்கன் துண்டுகள் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. பொரித்த சிக்கன் துண்டுகள் 10 துண்டுகள்
  3. செஸ்வான் சாஸ் 4ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. கோஸ் துருவியது ஒரு கப்
  6. வெங்காயம் 2
  7. கேரட் 2
  8. குடைமிளகாய் ஒன்று
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  11. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  12. பெப்பர் தூள் அரை டீஸ்பூன்
  13. முட்டை ஒன்று
  14. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. செஷ்வான் சாஸ் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் வதங்கியவுடன் அதில் ஊற வைத்து அரைத்த காய்ந்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கவும் வதங்கியவுடன் அதில் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் வினிகர் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்
  3. சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கேரட் கோஸ் குடமிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியவுடன் அதில் முட்டை சேர்த்து கிளறவும்
  5. முட்டைக் கலவையில் செஸ்வான் சாஸ் சிக்கன் துண்டுகள் சேர்த்து மீண்டும் கிளறவும்
  6. மசாலா கலவையில் வேகவைத்த பாசுமதி அரிசி சேர்த்து கிளறி பின் கடைசியாக மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து மீண்டும் கிளறி பரிமாறலாம்
  7. சுவையான காரசாரமான சேஷ்வான் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தயார்
  8. சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்க்க தேவையில்லை செஸ்வான் ஸாஸிலேயே எல்லாம் சேர்க்கப்பட்டு விட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்