வீடு / சமையல் குறிப்பு / Anniversary special mini north south fusion dinner recipes using Opos method and a cake.

Photo of Anniversary special mini north south fusion dinner recipes using Opos method and a cake. by saranya sathish at BetterButter
0
1
0(0)
0

Anniversary special mini north south fusion dinner recipes using Opos method and a cake.

Jul-31-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • మీడియం/మధ్యస్థ
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
 2. பன்னீர் ஒரு பாக்கெட்
 3. நறுக்கிய வெங்காயம் 2
 4. தக்காளி-3
 5. கரம் மசாலா அரை டீஸ்பூன்
 6. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
 7. சர்க்கரை அரை டீஸ்பூன்
 8. உப்பு ஒரு டீஸ்பூன்
 9. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
 10. வெண்ணெய் கால் கப்
 11. தண்ணீர் 3 டீஸ்பூன்
 12. பட்டாணி ஜிரா புலாவ் செய்ய தேவையான பொருட்கள்
 13. பாஸ்மதி அரிசி ஒரு மணி நேரம் ஊற வைத்தது ஒரு கப்
 14. பட்டாணி அரை கப்
 15. பூண்டு 4 பல்
 16. இஞ்சி ஒரு துண்டு
 17. பட்டை கிராம்பு ஏலக்காய் மிளகு பிரியாணி இலை அன்னாசி மொக்கு,ஜாதிக்காய் தோல் - தலா 2
 18. உப்பு ஒரு டீஸ்பூன்
 19. ஜிரா ஒன்றரை டீஸ்பூன்
 20. தண்ணீர் ஒரு கப்
 21. வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
 22. நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சிறிது
 23. தாளித்த பருப்பு செய்முறை:
 24. ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த துவரம்பருப்பு அரை கப்
 25. பச்சை மிளகாய் ஒன்று
 26. நறுக்கிய வெங்காயம் ஒன்று
 27. நறுக்கிய தக்காளி இரண்டு
 28. துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
 29. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
 30. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
 31. கரம் மசாலா அரை டீஸ்பூன்
 32. கஸ்தூரி மேத்தி ஒரு டீஸ்பூன்
 33. உப்பு முக்கால் டீஸ்பூன்
 34. தண்ணீர் ஒன்றரை கப்
 35. நறுக்கிய கொத்தமல்லி ஒரு டேபிள்ஸ்பூன்
 36. நெய் ஒன்றரை டீஸ்பூன்
 37. சீரகம் ஒரு டீஸ்பூன்
 38. நசுக்கிய பூண்டு 3 பல்
 39. வரமிளகாய் ஒன்று
 40. பெருங்காயத்தூள் சிறிது
 41. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
 42. கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
 43. துருவிய கேரட் கால் கிலோ
 44. பால் பவுடர் கால் கப்
 45. சர்க்கரை 175 கிராம்
 46. நெய் 6 டீஸ்பூன்
 47. தண்ணீர் ஒரு டேபிள்ஸ்பூன்
 48. ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
 49. அரைத்த தக்காளி விழுது 1
 50. புளி பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
 51. ரசப் பொடி ஒரு டீஸ்பூன்
 52. உப்பு ஒரு டீஸ்பூன்
 53. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
 54. கொத்தமல்லி இலை சிறிது
 55. கருவேப்பிலை சிறிது
 56. தண்ணீர் - 1/2 கப்
 57. எண்ணெய் ஒரு டீஸ்பூன்
 58. கடுகு ஒரு டீஸ்பூன்
 59. வரமிளகாய் ஒன்று
 60. நசுக்கிய பூண்டு 2 பல்
 61. சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:
 62. கோதுமை மாவு ஒரு கப்
 63. தண்ணீர் அரை கப்
 64. உப்பு அரை டீஸ்பூன்
 65. லெமன் கேக் செய்ய தேவையான பொருட்கள்:
 66. கோதுமை மாவு ஒன்றரை கப்
 67. தயிர் ஒரு கப்
 68. சர்க்கரை ஒரு கப்
 69. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்
 70. பேக்கிங் சோடா அரை டீஸ்பூன்
 71. வெனிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்
 72. உப்பு சிறிது
 73. எண்ணெய் அரை கப்
 74. எலுமிச்சை பழ சாறு 4 டீஸ்பூன்
 75. எலுமிச்சை பழ தோல் துருவல் 4 டீஸ்பூன்
 76. விப்பிங் கிரீம் ஒரு கப்

வழிமுறைகள்

 1. பன்னீர் பட்டர் மசாலா செய்முறை:
 2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர் கரம் மசாலா மிளகாய் தூள் உப்பு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 3. இரண்டு லிட்டர் குக்கரை எடுத்து அதில் 3 டீஸ்பூன் தண்ணீர் வெண்ணெய் சேர்த்து அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தை பரப்பி விடவும்.
 4. அதன்மேல் இஞ்சி பூண்டு விழுது உள்ளிருக்கும் சதை நீக்கிய தக்காளி சேர்க்கவும்.
 5. பின்னர் அதன் மேல் மேரினேட் செய்த பன்னீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு எடுக்கவும்.
 6. 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து குக்கரில் இருந்து விசிலை எடுத்து விடவும்.
 7. குக்கரில் இருக்கும் பன்னீரை ஒரு தட்டுக்கு மாற்றி மீதமிருக்கும் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து எடுக்கவும்.
 8. பின்னர் அரைத்த விழுதை குக்கரில் சேர்த்து சிறிது உப்பு தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக கலந்து உப்பு சரிபார்த்து பின் பன்னீரை சேர்த்து கஸ்தூரி மேத்தி தூவி நன்றாக கலந்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
 9. பின்னர் கொத்தமல்லி இலை தூவி வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
 10. ஜிரா பட்டாணி புலாவ் செய்முறை:
 11. இரண்டு லிட்டர் குக்கர் எடுத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்
 12. அதன் மேலே அரை கப் பட்டாணி துருவிய பூண்டு துருவிய இஞ்சி பட்டை கிராம்பு ஏலக்காய் மிளகு பிரியாணி இலை ஜாதிக்காய் தோல் அன்னாசி மொக்கு சேர்க்கவும்.
 13. பின்னர் அதன் மேல் ஊறவைத்து தண்ணீர் வடிகட்டிய அரிசி உப்பு சீரகம் சேர்த்து சுற்றிலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.
 14. பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
 15. பரிமாறுவதற்கு முன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
 16. தாளித்த பருப்பு செய்முறை:
 17. இரண்டு லிட்டர் குக்கரை எடுத்து ஊற வைத்து தண்ணீரை வடிகட்டிய பருப்பு நறுக்கிய தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 18. பின் அதன் மேல் மஞ்சள் தூள் துருவிய இஞ்சி உப்பு கசூரி மேத்தி கரம் மசாலா கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 19. பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து மூடி போட்டு மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கவும்.
 20. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சீரகம் தாளித்து பின் வரமிளகாய் நசுக்கிய பூண்டு மிளகாய் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வேகவைத்த பருப்பு கலவையில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
 21. கேரட் ஹல்வா செய்முறை:
 22. முதலில் கால் கிலோ துருவிய கேரட்டில் இருந்து சிறிது எடுத்து பால் பவுடர் கலந்து கொள்ளவும்.
 23. ஒரு குக்கரை எடுத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் பின் அதன் மேலே பால் பவுடர் சேர்க்காத கேரட் துருவலை பரவலாக சேர்க்கவும்
 24. பின் அதன் மேல் பால் பவுடர் கலந்த கேரட் துருவலை பரவலாக சேர்க்கவும்
 25. பின் அதன் மேல் சர்க்கரை 4 டீஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 10 விசில் விட்டு இறக்கவும்.
 26. குக்கர் நன்றாக ஆறியதும் மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சிறிதளவு நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
 27. ரசம் செய்முறை:
 28. ஒரு குக்கரை எடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது புளி பேஸ்ட் ரசப்பொடி உப்பு கொத்தமல்லி இலை மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து 6 விசில் விட்டு இறக்கவும்.
 29. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து பின் கறிவேப்பிலை வர மிளகாய் நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பின் ரச கலவையில் சேர்த்து கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
 30. சப்பாத்தி செய்முறை:
 31. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
 32. அதன் மேல் கோதுமை மாவு சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும் அளவிற்கு ஒரு ஸ்பூன் கொண்டு கலந்து கொள்ளவும்.
 33. பின் இந்த கலவையை ஒரு மூடி போட்டு 30 நிமிடம் வைக்கவும்.
 34. 30 நிமிடம் கழித்து இந்த கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 35. பின்னர் சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டை கொண்டு தேய்த்து தோசைக்கல்லில் ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
 36. லெமன் கேக் செய்முறை:
 37. ஓவனை 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்
 38. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தயிர் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் அளவிற்கு நன்றாக பீட் செய்யவும்.
 39. பின் அதில் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.
 40. பின்னர் அதில் எண்ணெய் வெனிலா எசன்ஸ் உப்பு எலுமிச்சை தோல் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 41. பின் கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
 42. கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து எண்ணெய் தடவி மாவு தூவி டச்ட் செய்த பேக்கிங் டிரேயில் ஊற்றி 40 நிமிடம் பேக் செய்து நன்றாக ஆறவிடவும்.
 43. ஒரு பாத்திரத்தில் விப்பிங் கிரீம் துருவிய எலுமிச்சை தோல் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக ஸ்டிப் ஆகும் வரை பீட் செய்து கொள்ளவும்.
 44. பின் ஒரு கேக் போடை எடுத்து அதில் ஒரு கேக்கை வைத்து அதன் மேல் இந்த க்ரீமை தடவிக் கொள்ளவும்.
 45. அதன் மேல் மற்றொரு கேக்கை வைத்து முழுவதும் இந்த கிரீமை கொண்டு தடவி விடவும்.
 46. பின்னர் டெக்கரேட்டிவ் nozzles கொண்டு தேவையான டிசைன்களை கேக் மீது செய்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின் கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்