வீடு / சமையல் குறிப்பு / கிட்ஸ் மினி ஊத்தாப்பம்

Photo of Kids Mini Uttappam by hajirasheed haroon at BetterButter
297
1
0.0(0)
0

கிட்ஸ் மினி ஊத்தாப்பம்

Jul-31-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கிட்ஸ் மினி ஊத்தாப்பம் செய்முறை பற்றி

தோசை மாவு பீட்ரூட் துருவல் இட்லி பொடியில் பன்னீர் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு ஒரு கப்
  2. பீட்ரூட் 1 துருவியது
  3. இட்லி பொடி-2 ஸ்பூன்
  4. பன்னீர் மசாலா 4 ஸ்பூன்
  5. நெய் 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பன்னீர் மசாலா செய்வதற்கு பனீரை பொடியாக நறுக்கி கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து கிளறி மசாலா கலவையில் பனீர் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை கடைசியாக தூவவும்
  2. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மூடி வைக்கவும் பிறகு நெய் ஊற்றி இட்லி பொடி சேர்த்து மூடி வைக்கவும்
  3. இதேபோல் பீட்ரூட் ஊத்தாப்பம் செய்ய தோசை மாவை ஊற்றி மூடி வைக்கவும் பிறகு நெய் ஊற்றி பீட்ரூட் துருவலை அதன் மேலே போட்டு மீண்டும் ரெண்டு செகண்ட் வேகவைத்து பரிமாறலாம்
  4. பனீர் ஊத்தாப்பம் செய்ய ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி வைக்கவும் பிறகு பனீர் மசாலா சேர்த்து நெய் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்
  5. சுவையான 3 விதமான ஊத்தாப்பம் தயார்
  6. குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்