வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை பருப்பு குழம்பு

Photo of Kondakadalai Paruppu Kuzhambu by Sowmya Sundar at BetterButter
553
1
0.0(0)
0

கொண்டைகடலை பருப்பு குழம்பு

Aug-01-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை பருப்பு குழம்பு செய்முறை பற்றி

கொண்டைகடலை சின்ன வெங்காயம் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து செய்த குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைகடலை -1/2 கப்
  2. துவரம் பருப்பு-1/2 கப்
  3. சின்ன வெங்காயம்-10
  4. நறுக்கிய தக்காளி-2
  5. பச்சை மிளகாய்-2
  6. புளி - எலுமிச்சை அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்+ 1/2 டீஸ்பூன்
  9. சாம்பார் பொடி-2 டீஸ்பூன்
  10. பெருங்காய பொடி-1/4 டீஸ்பூன்
  11. நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  12. கடுகு-1 டீஸ்பூன்
  13. வெந்தயம்-1 டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை -சிறிதளவு
  15. கொத்தமல்லி தழை-சிறிது

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை பத்து மணி நேரம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் துவரம் பருப்பு மற்றும் ஊறிய கொண்டைகடலை சேர்த்து தண்ணீர் விட்டு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் ,தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் புளிகரைசல் சேர்த்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயதூள் சேர்த்து கொதிக்க விடவும்
  5. வெங்காயம் வெந்ததும் சாம்பார் பொடி சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்
  6. பின்னர் வெந்த கொண்டைகடலை மற்றும் துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  7. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்