வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மொச்சக்கா கறி

Photo of Chicken Indian Bean curry by Banupriya Jawahar at BetterButter
326
1
0.0(0)
0

சிக்கன் மொச்சக்கா கறி

Aug-01-2018
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மொச்சக்கா கறி செய்முறை பற்றி

சிக்கன் மற்றும் மொச்சை இரண்டுமே புரதச்சத்து மிக்கவை. இரண்டையும் சேர்த்து செய்யும் போது ருசியும் அபாரம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சி்க்கன் 1/2 கிலோ
  2. பச்சை மொச்சை 1கப்
  3. பெல்லாரி 1
  4. தக்காளி 1
  5. மிளகாய் வற்றல் 5
  6. மிளகு 1 தேக்கரண்டி
  7. மல்லி விதை 1 தேக்கரண்டி
  8. பட்டை 1
  9. கிராம்பு 2
  10. சீரகம் 1/2 தேக்கரண்டி
  11. சோம்பு 1/4 தேக்கரண்டி
  12. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  13. மல்லித்தழை 1 கைப்பிடி
  14. எண்ணெய் 1மேசைக்கரண்டி
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வற்றல், மிளகு, சீரகம், மல்லிவிதை , பட்டை,கிராம்பு, சோம்பு ஆகியவற்றை வாசம் வரும் வரை வறுத்து அரைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக விழுதாக அரைத்துக் கோள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம் மற்றும் தக்காளி விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  5. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  6. வறுத்து அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
  7. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  8. மசாலா பச்சை வாசனை நீங்கியதும், சுத்தம் செய்த சிக்கன் மற்றும் பச்சை மொச்சை பயறை சேர்க்கவும்.
  9. நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  10. அவ்வப்போது கிளறி விடவும்.
  11. சிக்கனும், மொச்சையும் வெந்து, எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்
  12. சுவையான சிக்கன், மொச்சக்கா கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்