வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை குழம்பு

Photo of Peanut kulambu by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
562
2
0.0(0)
0

வேர்க்கடலை குழம்பு

Aug-01-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை குழம்பு செய்முறை பற்றி

வேர்க்கடலையில் செய்யப்படும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  4. மல்லித் தூள் ஒரு டீஸ்பூன்
  5. பாவ்பாஜி மசாலா ஒரு டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  7. சீரகம் கால் டீஸ்பூன்
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை தண்ணீரில் விட்டு இரவே ஊற விடவும்
  2. மறுநாள் காலையில் குக்கரில் வேர்க்கடலையை போட்டு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 விசில் விடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் நன்றாக வெந்ததும் அதனுடன் தக்காளி சாறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  5. இதனுடன் பாவ்பாஜி மசாலா மல்லித் தூள் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  6. பின்பு இதனுடன் வேகவைத்த வேர்க்கடலை சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகுமளவு கொதிக்கவிடவும்
  7. குழம்பு கெட்டியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
  8. சூடான சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி
  9. சூடான சாதம் சப்பாத்தி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்