வீடு / சமையல் குறிப்பு / நவதானிய குருமா

Photo of Navadhanya kurma by Surya Rajan at BetterButter
1001
0
0.0(0)
0

நவதானிய குருமா

Aug-02-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நவதானிய குருமா செய்முறை பற்றி

ஒன்பது வகையான தானியங்களை கொண்டு செய்யப்படும் குருமா. புரோட்டின் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தட்டப்பயறு ஒரு கைப்பிடி
  2. வெள்ளைக் கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி
  3. கருப்பு கொண்டை கடலை ஒரு கைப்பிடி
  4. பட்டாணி ஒரு கைப்பிடி
  5. ராஜ்மா ஒரு கைப்பிடி
  6. பச்சைப்பயிறு ஒரு கைப்பிடி
  7. மொச்சை ஒரு கைப்பிடி
  8. பட்டர் பீன்ஸ் ஒரு கைப்பிடி
  9. கருப்பு உளுந்து ஒரு கைப்பிடி
  10. எண்ணெய் 2 மேசைக்கரண்டி
  11. சோம்பு அரை ஸ்பூன்
  12. பட்டை சிறிதளவு
  13. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  14. வெங்காயம் 2
  15. தக்காளி 1
  16. கருவேப்பிலை சிறிதளவு
  17. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  18. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  19. மல்லித் தூள் அரை ஸ்பூன்
  20. கரம் மசாலா அரை ஸ்பூன்
  21. அரைக்க
  22. துருவிய தேங்காய் 5 மேசைக்கரண்டி
  23. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  24. சீரகம் ஒரு ஸ்பூன்
  25. முந்திரி 5

வழிமுறைகள்

  1. தானியங்கள் அனைத்தையும் நன்றாக கழுவி 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அதை மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின் அதனை எட்டு நிமிடம் பிரஷர் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  7. ஒரு நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் தேவை எனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  8. பச்சை வாசனை போனதும் வேகவைத்த தானியங்கள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்
  9. பின் அரைத்த தேங்காய் விழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை மிதமான தீயில் வேக விடவும்
  10. நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்