வீடு / சமையல் குறிப்பு / சுண்டக் கடலை தோசை

Photo of Chickpea dosa by Rachell Revathi Samuel at BetterButter
541
2
0.0(0)
0

சுண்டக் கடலை தோசை

Aug-02-2018
Rachell Revathi Samuel
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டக் கடலை தோசை செய்முறை பற்றி

புரத சத்து நிறைந்த தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டக் கடலை 1 கப்
  2. அரிசி 1/2 கப்
  3. அவல் 1/2 கப்
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. மிளகாய் வற்றல் 4
  6. கருவேப்பிலை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுண்டக் கடலை , அரிசி, அவலை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. நன்றாக ஊறிய பின் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். பின் மிளகாய் வற்றல் 4, கருவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின் மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 2-4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி கல் சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றவும்.
  5. எண்ணெய் ஊற்றி 2 புறமும் நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான சுண்டக் கடலை தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்